பிக் பாஸ் தந்த வாய்ப்பு.. டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தமான பிரபல ஹீரோயின்.. ஹேப்பி மூடில் நடிகை!

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், பிரபல நடிகைக்கு டாப் ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழில், விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன்

ஆகிய படங்களில் நடித்திருப்பவர் மோனல் கஜ்ஜார்.

இந்தி, குஜராத்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார்.

98 நாட்களுக்கு பிறகு

98 நாட்களுக்கு பிறகு

இவரும் அந்த வீட்டில் கலந்து கொண்ட, போட்டியாளர் அகிலும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை மோனலும் அகிலும் பின்னர் மறுத்திருந்தனர். இந்நிலையில் கடைசிப் போட்டியாளராக அந்த வீட்டில் கலந்துகொண்ட மோனல், பிக் பாஸ் வீட்டில் இருந்து 98 நாட்களுக்கு பிறகு வெளியேற்றப்பட்டார்.

சரியாக தெரியாது

சரியாக தெரியாது

குஜராத்தை சேர்ந்த மோனலுக்கு தெலுங்கு சரியாக தெரியாது என்றாலும் அந்த வீட்டில், அத்தனை நாட்கள் வெற்றிகரமாக இருந்தார். இதற்காகவே அவரை பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீட்டில் 14 வாரங்கள் இருந்த அவருக்கு ரூ.49 லட்சம் கிடைத்ததாகக் கூறப்பட்டது.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

பிக் பாஸில் இருந்து வெளியேறி விட்டாலும் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது, சோசியல் மீடியா. அதில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இதையடுத்து, அவருக்கு தெலுங்கில் சினிமா மற்றும் டிவி வாய்ப்புகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.

இணைய திரைப்படம்

இணைய திரைப்படம்

இந்நிலையில், இவருக்கு இணைய திரைப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காகஜ் என்ற இந்தப் படத்தை பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான் தயாரிக்கிறார். இதில் பங்கஜ் திரிபாதி ஹீரோவாக நடிக்கிறார். சதீஷ் கவுசிக் இயக்குகிறார். ஸீ 5 தளத்துக்காக இந்தப் படம் உருவாகிறது.

டிவி ஷோக்கள்

டிவி ஷோக்கள்

பல வருடங்களுக்குப் பிறகு அவருக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், மோனல். இந்தப் படத்தை அடுத்து சில தெலுங்கு படங்களிலும் டிவி ஷோக்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X