ஏன் எதுக்கு? இருந்த ஒரே நடிகை அவர்தான்.. அவரையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற போறாங்களாமே?
ஐதராபாத்: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நடிகையான அவரை, வீட்டில் இருந்து வெளியேற்றப் போவதாகக் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டில் ஸ்பெஷல் கொண்டாட்டம் நடந்தது.
இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் அதிக சுவாரஸ்யம் இல்லை. நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் ஜாலியாக பேசினார்.

சண்டை ஈகோ
ஒவ்வொரு வாரமும் எதையாவது டச் பண்ணி பேசும் கமல்ஹாசன், இன்று என்ன சொல்லப் போகிறார் என்றும் பிக் பாஸ் வீட்டில் ஏதும் பரபரப்பு நடக்கிறதா என்பதையும் காண ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். போட்டியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகளும் ஈகோவும் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது.

ஆர்ப்பாட்ட ரணகளம்
தமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியும் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனாவும் தன் பங்குக்கு ஆர்ப்பாட்டமாக ரணகளபடுத்தி வருகிறார். ஆட்டம் பாட்டம், கிண்டல், ஜாலி கேலி என கொண்டாட்டத்தில் இருக்கிறது.

ஒரே நடிகை
இயக்குனர்கள் சூர்யகிரண், அம்மா ராஜசேகர் உட்பட சிலர் வெளியேறிவிட்டனர். இந்நிலை யில், மேலும் சிலர் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார், நடிகை மோனல் கஜ்ஜார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நடிகை இவர் தான்.

இந்தி, குஜராத்தி
தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார், மோனல். தமிழில், கவுரவ் நாராயணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி, குஜராத்தி மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

போட்டியாளர் காதல்
இவருக்கு, தெலுங்கு பிக் பாஸ் வீட்டு டீம் மேட்ஸிடம், சமத்து பொண்ணு இமேஜ் இருந்தது. பார்வையாளர்களிடமும் இருந்தது. அதிகம் சண்டை போடாமல் அமைதியாக இருந்த மோனல், பிறகு எதற்கெடுத்தாலும் அழுவதாக இருந்தார். இவரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாகக் கூறப்பட்டது.

காதலிப்பது தெரிகிறது
இதுபற்றி நாகார்ஜுனா, வெளிப்படையாகவே கேட்க, எங்களுக்குள் இருப்பது நட்புதான் என்று சொன்னார் அகில். ஆனால், அவர்கள் இருவரும் காதலிப்பது தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, அவருக்கு வாக்குகள் குறைந்த அளவிலேயே கிடைத்து வருகின்றன. இதனால் அவர் விரைவில் வெளியேற்றப்படுவார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











