Monday Memes: சொப்பனத்திலும் கண்டதில்லே சாரே.. மண்டே மீம்ஸில் புகுந்து விளையாடும் நெட்டிசன்ஸ்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. மே 4ஆம் தேதி ஆனது திங்கட்கிழமை என்பதால், நெட்டிசன்கள் பலரும் திங்கட்கிழமையை மையமாக கொண்டு பல ரசிக்கத்தகுந்த மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.

பொதுவாகவே திங்கட்கிழமை என்றால், தவணை நாள், சலிப்பு நாள், காரணங்கள் சொல்லி லீவு போடும் நாள் என திங்கட்கிழமை என்றாலே பெரும்பாலும் உலகம் முழுவதும் ஒரு விருப்பமில்லாத நாள் தான். அதுவும் நமது ஊர் கிராமப்புறங்களில் திங்கட்கிழமை என்றாலே மொடை நாள் என்று எல்லாம் கூறுவார்கள். வார இறுதி நாட்களை ஜாலியாக செலவு செய்துவிட்டு, மீண்டும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எல்லோருமே தங்களது வழக்கமான பணிகளை தொடங்கும் நாள்.

ஏற்கனவே திங்கட்கிழமை என்றால் ஏதோ சபிக்கப்பட்ட நாளாக கருதப்பட்டு வரும் நிலையில், திங்கட்கிழமையே பெருமை கொள்ளும் அளவுக்கு திங்கட்கிழமைக்கு முக்கியத்துவம் கொண்ட நாளாக மாற்றி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதாவது இந்தியாவில் உள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் அதேபோல் யூனியன் பிரதேசமான புதுச்சேரி என இந்த ஐந்துக்குமான தேர்தல் முடிவுகள் அதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Monday Memes Go Wild Netizens Turn Election Day into a Fun Fest Online

வழக்கத்தைக் காட்டிலும் இம்முறை இளைஞர்கள் பலரும் இந்த தேர்தல் மீது அதிக கவனம் செலுத்தி வருகினறனர். முன்னர் எல்லாம் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் அந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு ஆருடம் சொல்வார்கள். ஆனால் இந்த தேர்தலில் தொடக்கத்தில் அப்படிக் கூறினாலும், தேர்தல் நெருங்க நெருங்கவும், தேர்தல் முடிந்த பின்னரும் யாராலும் கணிக்க முடியாத தேர்தலாக உள்ளது.

இப்படி இருக்கையில் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருப்பதால் நாளைய தினம், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத பொது விடுமுறைதான் என்று கூட கூறலாம்.

Monday Memes Go Wild Netizens Turn Election Day into a Fun Fest Online

மீம்ஸ்: இப்படி இருக்கையில், நெட்டிசன்கள் பலரும் திங்கட்கிழமைக்காக பல மீம்ஸ்களை உருவாக்கி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றைக் குறித்து மட்டும் இங்கு காணலாம். சார்பட்டா பரம்பரையில் உள்ள நீதான் வாத்தியாரே என்ற டெம்ப்ளேட்டை வைத்து, வாழ்க்கையில் முதல் முறையாக திங்கட்கிழமைக்கு முன்னாடி ஏன் ஞாயிற்றுக்கிழமை வந்துச்சுனு யோசிக்க வெச்சுட்ட வாத்தியாரே என விஜய்யை கேட்பது போல மீம் பகிர்ந்துள்ளனர்.

சொப்பனத்திலும்: அதேபோல், வரலாற்றில் முதல் முறையாக ஒரு திங்கட்கிழமைக்கு தமிழ்நாடு காத்துக் கொண்டு இருக்கிறது என்று பகிர்ந்துள்ளார்கள். மேலும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற பாடலான ஜாலிய ஜிம்கானா பாடலில் வரும் வரிகளான , அத்தனையும் போனாலும் எம்ப்டியாதான் ஆனாலும் பதறாம இருந்தா பீஸ்ட் நீதான்டா என்ற வரிகளைப் பகிர்ந்து Monday Motivation என்று பகிர்ந்துள்ளனர். மேலும், ஜெயிலர் படத்தில் வரும் நடிகர் விநாயகன் டெம்ப்ளேட்டை பகிர்ந்து, ஒரு திங்கட்கிழமைக்காக காத்துக் கிடப்பேன்னு நான் சொப்பனத்திலும் கண்டதில்லை சாரே என்றும் பகிர்ந்துள்ளார்கள். இதுபோல பல மீம்ஸ்கள் இணையத்தில் ரவுண்டு கட்டி அடித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X