Don't Miss!
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
லட்சக்கணக்கில் ஏமாற்றிவிட்டார்.. பண மோசடி செய்துவிட்டார்.. விஜய் அப்பா மீது போலீசில் புகார்!
சென்னை: நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர் ஆவார். 80-90 களில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர், அதன்பின் டைரக்ட் செய்வதை குறைத்துக் கொண்டார்.
கடந்த சில வருடங்களாக இவர் தமிழில் படம் எதுவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் விழாக்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு வருகிறார்.
முதல் நாளேவா.. ரைட்டு.. வனிதா வந்த வேலையை சிறப்பா பண்ண ஆரம்பிச்சுடுச்சு!

என்ன வழக்கு
இந்த நிலையில்தான் எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேரு சமுதாய பிரச்சனைகளுக்கு பொதுநல வழக்கு தொடுப்பவர் டிராபிக் ராமசாமி. இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலம்.

என்ன படம்
இவரை பற்றி வெளியான படம் டிராபிக் ராமசாமி. கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் டிராபிக் ராமசாமி வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை முதலில் தமிழ்நாட்டில் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவர் வெளியிடுவதாக இருந்தது .

என்ன பணம்
இந்த படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாகக் கூறி 21 லட்சம் ரூபாய் எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கி இருக்கிறார். படத்தை நீங்களே வெளியிடுங்கள், முன்பணமாக 21 லட்சம் கொடுங்கள் என்று எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கி இருக்கிறார். ஆனால் கடைசியில் எஸ்.ஏ சந்திரசேகரே படத்தை வெளியிட்டார்.

ஆனால் இல்லை
அவரே தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டார். ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் பிரம்மானந்தம் சுப்பிரமணியனிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. வட்டியுடன் கேட்டும், இன்னும் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் எஸ்.ஏ சந்திரசேகர் மீது புகார் அளித்துள்ளார்.

புகார்
பண மோசடி செய்ததாக எஸ்.ஏ சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரம்மானந்தம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் .தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியீட்டு உரிமையை வழங்காமல் ஏமாற்றியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார் .