twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்!

    |

    சென்னை: உலகளவில் பெரும் ரசிக பட்டாளத்தை கொண்டுள்ள மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸை இனி தமிழ் மொழியிலும் காணலாம்.

    ஹாலிவுட் படங்களை நம்ம ஊரு மொழியில் பார்ப்பதே அலாதியான சுகம் தான்.

    என்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா? இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா?என்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா? இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா?

    அதே போல தற்போது ஏகப்பட்ட வெப்சீரிஸ்களும் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன.

    மணி ஹெய்ஸ்ட்

    மணி ஹெய்ஸ்ட்

    நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸுக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் நாட்டிலும் அந்த வெப்சீரிஸை பலரும் பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மணி ஹெய்ஸ்ட் 4வது சீசன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

    விஜய் சரியா இருப்பார்

    விஜய் சரியா இருப்பார்

    மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸில் நாயகனாக திகழும் புரொபஸர் கதாபாத்திரத்தில் நடிக்க எந்த நடிகர் சரியாக இருப்பார் என இந்திய நடிகர்களின் புகைப்படங்களை காட்டி மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோவிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு தளபதி விஜய் பொருத்தமாக இருப்பார் என்று அலெக்ஸ் கூறியது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

    மணி ஹெய்ஸ்ட் கதையா

    மணி ஹெய்ஸ்ட் கதையா

    கடந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த மாஸ்டர் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், மணி ஹெய்ஸ்ட் கதைதான் மாஸ்டர் கதையா? என்கிற கெஸ்சிங் கேம்களும் சோஷியல் மீடியாவில் உலா வந்தன. மாஸ்டர் படத்தில் விஜய் வாத்தியாராக நடிக்கிறார் என்கிற அப்டேட் தான் இதற்கு வித்தாக அமைந்தது.

    தமிழில் பார்க்கலாம்

    தமிழில் பார்க்கலாம்

    உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள மணிஹெய்ஸ்ட் வெப்சீரிஸ் இப்போ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தற்போது நெட்பிளிக்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்தியில் டப் செய்யப்படாதது குறித்து வட இந்தியர்கள் அப்செட்டாகி உள்ளனர்.

    டோக்கியோ திருநெல்வேலி இல்லை

    டோக்கியோ திருநெல்வேலி இல்லை

    மணி ஹெய்ஸ்ட்டில் புரொபஸர் கதாபாத்திரத்தை போலவே அவரது டீமில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ஸ்ட்ராங்கான கேரக்டராகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களும், டோக்கியோ, நைரோபி, பெர்லின், ரியோ, டென்வர் என ஊர் பெயர்களாகவே இருக்கும். இந்நிலையில், தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ள நிலையில், டோக்கியோவை திருநெல்வேலி என்றும் நைரோபியை நெல்லூர் என்றும் மாற்றவில்லை என செம நக்கலாக நெட்பிளிக்ஸ் இந்தியா போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

    தென்னிந்திய மார்க்கெட்டை பிடிக்க

    தென்னிந்திய மார்க்கெட்டை பிடிக்க

    திடீரென இப்படி நெட்பிளிக்ஸ் இந்தியா தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்னவென்றால், இந்த மார்க்கெட்டை பிடிக்கத் தான். அதிகளவிலான சந்தாதாரர்களை உருவாக்கவே இப்படி பாவக் கதைகள், பிட்ட கதலு, மணி ஹெய்ஸ்ட் என இறக்கி வருகிறது.

    ஜகமே தந்திரம்

    ஜகமே தந்திரம்

    மாஸ்டர் படத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என துடித்த நெட்பிளிக்ஸிற்கு அந்த கனவு நிறைவேறவில்லை. அடுத்ததாக யாரை மடக்கலாம் என பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் 55 கோடி கொடுத்து ஜகமே தந்திரத்தை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் எத்தனை பெரிய நடிகர்கள் படங்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். இப்போதைக்கு புரொபஸர் தமிழில் என்ன பேசுறாருன்னு பார்ப்போம்.

    English summary
    Netflix India targeting South India market hugely. Now, Money Heist web series dubbed in Tamil and Telugu languages respectively.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X