மாஸ்டருக்கெல்லாம் மாஸ்டர்.. வந்தாச்சு மணி ஹெய்ஸ்ட் 4ம் சீசன்.. உலகளவில் டிரெண்டாகும் #MoneyHeist4

சென்னை: ஸ்பெயின் நாட்டு வெப் தொடரான மணி ஹெய்ஸ்ட் தனது 4ம் பாகத்தை இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா கலவரத்திலும், உலகளவில் ரசிகர்கள் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் இந்த மணி ஹெய்ஸ்ட் 4ம் பாகத்துக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே வெளியான 3 பாகங்களுக்கு உலகளவில் கிடைத்த வரவேற்பு தான் இந்த 4ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மாஸ்டருக்கெல்லாம் மாஸ்டர்

மாஸ்டர் படத்தில் விஜய் எப்படி வாத்தியாராக இருந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாரோ? அதை போல இந்த ஸ்பெயின் வாத்தி உலக ஃபேமஸ் ஆகி உள்ளார். மாஸ்டர் படத்தின் ரைட்டரும், மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநருமான ரத்னகுமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பானிஷ் வாத்தி கம்மிங் என ட்வீட் போட்டுள்ளார்.

நைஜீரியாவில்

நைஜீரியா நாட்டிலும் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் பலியாகி உள்ளனர். ஆனால், Money Heist வெப்சீரிஸ் மீது கொண்ட மோகம், மக்களை கூட்டம் கூட்டமாக கூடி, அந்த வெப் தொடரை பார்க்க வைத்து வருகிறது.

34 மில்லியன் ரசிகர்கள்

2017ம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டில் ஒளிபரப்பான கேபிள் டிவியில் வெளியான இந்த மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸுக்கு இருக்கும் மவுசை உணர்ந்து கொண்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம், இதனை தனது ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பி உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்களை சேர்த்துள்ளது. உலகளவில் கடந்த சீசனை 34 மில்லியன் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர்.

அப்படி என்னதான் இருக்கு

அப்படி என்னதான் இருக்கு

அலெக்ஸ் பினா இயக்கத்தில் உருவாகி உள்ள மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரில் புரொபஸர் ரோலில் ஆல்வரோ மார்ட்டே நடித்துள்ளார். கிரிமினல் மைண்ட் படைத்த அந்த வாத்தியின் டீமில் இருக்கும் நபர்கள், ஸ்பெயினில் பணம் அச்சடிக்கும் இடத்தை ஆக்கிரமித்து, பல மில்லியன் டாலர்கள் பணத்தை அச்சடித்து எப்படி தப்பிக்கின்றனர். எதற்காக இதை செய்கின்றனர் என்பது தான் மணி ஹெய்ஸ்டின் அட்டகாசமான திரைக்கதை.

ஆக்‌ஷன் பேக்டு டிரைலர்

8 எபிசோடுகளை கொண்ட 4வது சீசன் இன்று மதியம் 12 மணி முதல் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஸ்பானிஷ் மொழியிலே ஒளிபரப்பாகும் இந்த வெப் சீரிஸுக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், சமீபத்தில் வெளியான மணி ஹெய்ஸ்ட் 4ம் பாகத்தின் டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X