twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னாது லெமன் சாதம், வெஜ் பிரியாணியா.. மணி ஹெய்ஸ்ட்டுக்கு தமிழில் அடடே விளம்பரம்!

    |

    சென்னை: தமிழ் ரசிகர்களை அதிகளவில் டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

    அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் எல்லாம் ஏற்கனவே தமிழ் ஆடியன்ஸை அதிகளவில் கவர்ந்துள்ள நிலையில், நெட்பிளிக்ஸும் இங்கே உள்ள மார்க்கெட்டை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    மணி ஹெய்ஸ்டின் 5வது சீசன் குறித்த விளம்பரத்திற்கு மாஸ்டர் வாத்தி கம்மிங் ஸ்டைலில் தமிழில் வெளியிட்டுள்ள விளம்பரம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

    வாத்தி கம்மிங்...சேலையில் குத்தாட்டம் போட்ட சூப்பர்ஸ்டார் மகள் வாத்தி கம்மிங்...சேலையில் குத்தாட்டம் போட்ட சூப்பர்ஸ்டார் மகள்

    மணி ஹெய்ஸ்ட்

    மணி ஹெய்ஸ்ட்

    பிரபல வெப் சீரிஸான மணி ஹெய்ஸ்ட்டுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அதன் இயக்குநர், நெட்பிளிக்ஸ் என பலரும் தற்போது தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதிலேயே அதிக ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர். மணி ஹெய்ஸ்ட்டின் 5வது பாகம் எப்போது ரிலீசாகப் போகிறது என்கிற அதிகாரப்பூர்வ அப்டேட் நாளை வெளியாகிறது.

    5வது சீசன் எப்போ

    5வது சீசன் எப்போ

    நாளை ஜூலை 7ம் தேதி மணி ஹெய்ஸ்ட்டின் 5வது சீசன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதில் நடித்துள்ள பிரபல நடிகர் மரியா டி லா ரோசா இன்னும் சரியாக இரண்டே மாதத்தில் மணி ஹெய்ஸ்ட்டின் 5வது மற்றும் கடைசி பாகம் வெளியாகும் என அறிவித்து விட்டார்.

    வாத்தி ஆர்டர்

    வாத்தி ஆர்டர்

    மணி ஹெய்ஸ்ட்டுக்கும் விஜய் நடித்த மாஸ்டர் படத்துக்கும் ஏகப்பட்ட பொருத்தங்கள் உள்ள நிலையில், வாத்தி ஆர்டர் நாளை வருகிறது என லெமன் சாதம், வெஜ் பிரியாணி என ஒரு ஃபுல் சாப்பாடு லிஸ்ட்டே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மணி ஹெய்ஸ்ட் புரொபஸர் படத்துடன் இடம்பெற்று ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    பேப்லோ சேட்டா

    பேப்லோ சேட்டா

    அதை விட ஒரு படி சென்று நார்கோஸ் பேப்லோவை பேப்லோ சேட்டாவாக மாற்றி அவருக்கு வேட்டியெல்லாம் கட்டி விட்டு அதகளம் பண்ணி வருகின்றனர் இந்தியாவின் நெட்பிளிக்ஸ் ஊழியர்கள். நம்ம ஸ்டோரிஸ் நம்ம நெட்பிளிக்ஸ் என ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து தென்னிந்திய ரசிகர்களை புதிய சந்தாதாரர்களாக மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம் 1000 ரூபாய் என்பதை மாதம் (டெஸ்க்டாப் வெர்ஷன்) 200 ரூபாய் என மாற்றினாலே பலரும் நெட்பிளிக்ஸ் பக்கம் திரும்பிவிடுவர்.

    Recommended Video

    இந்த Youtubers மாசம் இவ்ளோ சம்பளம் வாங்குறாங்களா? GP Muthu, Sivangi, Archana

    English summary
    Money Heist Vaathi order is coming promotion targets Tamil audience. Netflix India new ad promotion ideas surprises audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X