Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த கல்யாண விருந்து இருக்குல்ல தம்பி.. அதுதான் பெரிய திருப்புமுனை.. தம்பி ராமையா
சென்னை: படம் ஓடுதோ இல்லியோ, நம்ம பாட்டுக்கு உழைக்கறத உழைச்சிக்கிட்டே இருக்கணும். அதுக்கு உண்டான பலன் சீக்கிரமே நம்ம கைக்கு வந்து தீரும், அப்பிடிங்கறதுக்கு நம்ம தம்பி ராமையா ஒரு நல்ல உதாரணம். காமெடி நடிகருக்கு உதவியாளராக நடித்து அடிவாங்கிக்கொண்டிருந்த தம்பி ராமையாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதே ஒரு கல்யாண விருந்துதான். அந்த நாள்தான் அவரைப்பார்த்து அதிர்ஷ்ட தேவதை சிரித்த நாள்.
நல்ல வாய்ப்புங்கறது யாருக்கு எந்த நேரத்துல எப்படி வரும்னு யாருக்குமே தெரியாது. அப்படி வர்ற வாய்ப்பை நம்ம கெட்டியா பிடிச்சி யூஸ் பண்ணிட்டா நாம வாழ்க்கையிலே மேல வர்றத யாராலையும் தடுக்கவும் முடியாது. அப்படித்தான் தனக்கு வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டார் நடிகர் தம்பி ராமையா.
டைரக்டர் பிரபு சாலமன் மைனா படத்த எடுத்துக்கிட்டிருக்கும் போது ஒரு சுவராஸ்யமான சம்பவம் நடந்துச்சு. என்னன்னா அந்தப் படத்தோட ஸ்டோரி டிஸ்கஷன் நடந்துக்கிட்டிருக்கும் போது, தன்னோட படத்துல அப்போ பிரபலமா இருந்த ஒரு காமெடி நடிகர எப்படியாச்சும் நடிக்க வைக்கணும்னு ரொம்ப பிரயாசைப்பட்டாரு.
நானும்
எத்தனை
நாள்
தான்
நல்லவளாவே
இருப்பது:
இயக்குநரை
அதிர
வைத்த
நடிகை

டிமிக்கி கொடுத்த காமெடி நடிகர்
அதுக்காக அந்த காமெடி நடிகர உடனே சந்திச்சி பேசி நீங்க எப்பிடியாச்சும் இந்தப் படத்துல நடிக்கணும்னு கேட்டுப் பார்த்தார் டைரக்டர். ஆனாங்காட்டி, இப்போதைக்கு உங்க படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு கொடுப்பின இல்ல. அதுக்கான நேரங்காலம் கூடி வரல போலிருக்குன்னு சொல்லி டைரக்டர் பிரபு சாலமனுக்கு டிமிக்கி கொடுத்துட்டே வந்தார்.

திடீர் சந்திப்பு
நிலமை இப்பிடி இருக்கறச்சே, பிரபு சாலமன் ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தப்போ, அங்க எதேச்சையா நம்ம குணச்சித்திரம் மற்றும் காமெடி நடிகரான தம்பி ராமையாவ சாப்பாட்டு பந்தியில வச்சி சந்திச்சிருக்கார். தம்பி ராமையாவுக்கு டைரக்டர் பிரபு சாலமன எங்கயோ பாத்த ஞாபகம் இருக்கு, ஆனா எங்கன்னு தெரியல.

கொக்கி படம்
அதனால தம்பி ராமையாவே முந்திக்கிட்டு தம்பி உங்கள நான் எங்கயோ பாத்த மாதிரி இருக்கு, ஆனா எங்கன்னு தெரியலன்னு சொல்ல, பதிலுக்கு இவர், சார் எம்பேர் பிரபு சாலமன், இப்ப ரீசண்ட்டா ‘கொக்கி' ன்னு ஒரு படம் வந்திச்சே. அந்தப் படத்த டைரக்ட் பண்ணினது நாந்தான் சார், அப்பிடின்னு பிரபு சாலமன் பதில் சொல்லி இருக்கார்.

நல்ல பண்ணியிருக்கீங்க தம்பி
உடனே தம்பி ராமையாவும், ரொம்ப சந்தோஷம் தம்பி, அந்தப் படத்த நானும் பாத்தேன். ரொம்ப பிரமாதமா டைரக்ட் பண்ணிருக்கீங்க, படம் நல்லா இருந்தது தம்பி அப்பிடின்னு சொல்லிட்டு, தம்பி, எம்பேரு தம்பி ராமையா, நான் இப்போ வடிவேலு சார் படத்துல நடிச்சிட்டு இருக்கேன், என்ன நீங்க நிச்சயமா பாத்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன்னு தம்பி ராமையா சொன்னார்.

படம் முழுக்க நீங்க வர்றீங்க
பதிலுக்கு பிரபு சாலமனும், நா உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோசம். சார் நா இப்போ ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டிருக்கேன் சார். அதுல ஒரு நல்ல காமெடி ரோல் இருக்கு, படம் முழுக்க ஹீரோவோடயே ட்ராவல் பண்ற ரோல். நீங்க அந்த கேரக்டருக்கு பொருத்தமா இருப்பீங்கன்னு நா நெனைக்கிறேன். ஆனா என்னால பணம் ரொம்ப ஜாஸ்தியா கொடுக்க முடியாது சார். இருந்தாலும் நீங்க நடிப்பீங்களான்னு பிரபு சாலமன் கேட்டார்.

பணமே வாழ்க்கை கிடையாது
அதுக்கு தம்பி ராமையாவோ, தம்பி வாழ்க்கைக்கு பணம் ரொம்ப முக்கியந்தான். ஆனா அதுக்காக பணமே வாழ்க்கையாகிடாது. படம் ஜெயிச்சதுன்னா பணத்தை வாங்கிக்கிறேன். அவ்வளவுதானே, என்ன வந்துச்சு இப்போ அப்பிடின்னு அசால்டா தத்துவம் சொல்லிட்டு, நல்ல ஸ்கிரிப்டுன்னு சொல்றீங்க, நா நடிச்சா நல்லா இருக்கும்னு வேற சொல்றீங்க, அதனால நா இந்தப் படத்துல நடிக்கிறேன் தம்பி, படத்த விட நல்ல கேரக்டர் ரொம்ப முக்கியம் தம்பி, அத மிஸ் பண்ணக்கூடாதில்லையா அப்பிடின்னு சொல்ல பிரபு சாலமன் அப்பிடியே வாயடச்சி நின்னுட்டார். கையோட அந்த படத்துல தம்பி ராமையாவ கமிட்டும் பண்ணிட்டார்.

நல்லா ரீச் ஆச்சி
அந்தப் படமும் ரிலீசாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டய கௌப்பிடிச்சி. முக்கியமா தம்பி ராமையாவோட கேரக்டர் ரோல் நல்லா ரீச் ஆச்சி. தம்பி ராமையாவுக்கு பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர்ன்னு சொல்லி தேசிய விருது கூட கெடச்சது. அந்தப்படம் தான் மைனா.

ஃபிலிம்ஃபேர் அவார்டு
மைனா படத்துல விதார்த், அமலா பால், தம்பி ராமையா இவங்க மூணு பேரும் நடிக்க பிரபு சாலமன் டைரக்ட் செஞ்சிருக்கார். அந்தப்படம் அந்த வருசத்துல பெஸ்ட் பிக்ஸர்னு ஃபிலிம் ஃபேர் அவார்டும், தம்பி ராமையாவுக்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர்னு தேசிய விருதும் கெடச்சது.

நிச்சயம் ஒரு நாள் கெலிப்போம்
இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா, நம்ம பாட்டுக்கு நம்ம வேலையே சின்சியரா செஞ்சிட்டே இருக்கணும். அதுக்கு கண்டிப்பா ஒரு நாள் இல்லாங்காட்டி ஒரு நாள் ஜெயிச்சே தீருவோம் அப்பிடிங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். இந்த நல்ல விஷயத்தை நம்ம கிட்ட சொன்னது, தம்பி ராமையாவோட ரொம்ப ரொம்ப நெருங்கின தோஸ்த்தான சுமதிஸ்ரீ தான். ஸோ, நாமளும் கண்டிப்பா ஒரு நாள் கண்டி ஒரு நாள் ஜெயிப்போம்கிறதுக்கு தம்பி ராமையா ஒரு நல்ல உதாரணம் தம்பிங்களா.