"பணம் தான் இங்கு எல்லாமே".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்!

திருமணம் சில தருத்தங்களுடன் பட விழாவில் இயக்குனர் சேகரன் மிக உருக்கமாக பேசினார்.

Recommended Video

திருமணம் விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்- வீடியோ

சென்னை: பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட காலத்தால் அழியாத தரமான படங்களை இயக்கியவர் சேரன். ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்தார்.

Money only matters here, says director Cheran

இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை நாயகனாக வைத்து திருமணம் - சில திருத்தங்களுடன் எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த பட தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சேரன், "ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படம் என்னை பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டது. இதனால் சினிமா எடுக்க முடியாமல் தவித்தேன்.

என்னை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முன்வரவில்லை. காரணம் என்னுடைய பொருளாதார பிரச்சினைகள். இங்கு பணம் தான் எல்லாமே. பணம் இல்லை என்றால் பிணம் தான்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிரனிசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்னை தேடி வந்து இந்த வாய்ப்பை தந்தனர். என்னுடைய பொருளாதார பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்தனர். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

விஜய் சேதுபதிக்கான கதையை தயாரித்து வைத்திருக்கிறேன். அவர் எப்போது ஓகே சொன்னாலும் படப்பிடிப்புக்கு சென்றுவிடலாம். அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் கடந்த இரண்டு வருடங்களாக என்னை இயக்கியது.

இந்த படம் உளவியல் ரீதியாக நம் வாழ்வை பேசும். கதையை காமெடியாக சொல்லியிருக்கிறோம். நம் வாழ்வில் எப்படி எல்லாம் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம்" என அவர் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X