மெட்ராஸ் யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் ரேங்க்.. மாவீரன் தங்கச்சின்னா சும்மாவா.. மாஸ் காட்டிய மோனிஷா பிளஸி!

சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மோனிஷா பிளஸி, மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவே நடித்து அசத்தினார். பொதுவாக நடிப்பில் ஆர்வம் செலுத்தும் பலரும் படிப்பில் ஆர்வம் செலுத்த மாட்டார்கள் எனக்கூறுவர். ஆனால், தான் அதிலும் டாப் என நிரூபித்து இருக்கிறார் மோனிஷா பிளஸி.

மெட்ராஸ் யூனிவர்சிட்டி டாப்பராக மாறியுள்ள மோனிஷா பிளஸி விருது வாங்கிய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

Monisha Blessy won Madras University First Rank and shares the video

இதே போல சினிமாவிலும் டாப்பாக வரவேண்டும் என மோனிஷா பிளஸிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி பிரபலம்: குழந்தைப் பருவத்தில் இருந்தே விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த மோனிஷா பிளஸி, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ஆனால், அவருக்கு உரிய அடையாளத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான அந்த சமையல் நிகழ்ச்சியில் அவர் செய்த அட்டகாசங்களை கண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு விசிறிகளாக மாறினர்.

மாவீரன் படத்தில்: டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு வாய்ப்புக் கொடுத்த சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் குக் வித் கோமாளியில் இருந்தே ஒரு பிரபலத்துக்கு சான்ஸ் கொடுப்போமே என நினைத்து மோனிஷா பிளஸிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.

சிவகார்த்திகேயன் தங்கை: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில் உள்ளிட்ட பலர் நடித்த மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக மோனிஷா பிளஸி நடித்து பாராட்டுக்களை பெற்றார். சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த அதிர்ஷ்டம் ஹீரோயின் சான்ஸ் சீக்கிரமே வரும் என ரசிகர்கள் வாழ்த்தினர்.

சொந்தமாக கார்: மாவீரன் படத்தில் நடித்த பிறகு சமீபத்தில் மோனிஷா பிளஸி சொந்தமாக கார் வாங்கிய போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், படிப்புக்கு கிடைத்த வெற்றியாக தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ மாறியிருக்கிறது.

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் முதலிடம்: செயின்ட் தாமஸ் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவியாக படித்த மோனிஷா பிளஸி மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளார். அதுதொடர்பாக நடைபெற்ற கல்லூரி விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டம் பெரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இம்புட்டு பெரிய படிப்ஸா நீ என கமெண்ட் போட்டு இதே போல சினிமாவிலும் டாப் ஹீரோயினாக வர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X