twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பாகுபலிக்கு நிகரான வெற்றி மான்ஸ்டருக்கு கிடைத்துள்ளது'... எலி மாமா ஹேப்பி!

    மான்ஸ்டர் திரைப்படம் தனது திரைவாழ்க்கையை தூக்கி நிறுத்தியுள்ளதாக நடிகர் எஸ்.கே.சூர்யா தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    குழந்தைகள் படம்பார்த்ததை கண்டு மகிழ்த்தேன்- SJ Surya பேச்சு | Monster Movie success meet

    சென்னை: இடையில் விழ இருந்த தனது சினிமா வாழ்க்கையை தூக்கி நிறுத்தியப்படம் மான்ஸ்டர் என நடிகர் எஸ்கே சூர்யா தெரிவித்துள்ளார்.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர், கருணாகரன் நடித்துள்ள படம் மான்ஸ்டர். இத்திரைப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இத்திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இப்போது பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மான்ஸ்டர் பட வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி கூறினார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது,

    நடிகை ரூம் போட்டு யோசித்து செய்வது நடிகருக்கு தானாக நடக்கிறதே! நடிகை ரூம் போட்டு யோசித்து செய்வது நடிகருக்கு தானாக நடக்கிறதே!

    இரட்டிப்பு வெற்றி

    இரட்டிப்பு வெற்றி

    ''மான்ஸ்டர் வெற்றி பற்றி எத்தனை முறை பேசினாலும் சந்தோஷமாக தான் இருக்கிறது. இது ஒரு இரட்டிப்பு வெற்றி. மான்ஸ்டர் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஒரு மாஸ் ஹீரோ படத்துக்கு முதலில் ஒரு மாஸ் கூட்டம் வரும். பின்னர் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். இந்த படத்தில் கதை தான் ஹீரோ. இரண்டாவது ஹீரோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான பொட்டேண்ஷியல் ஸ்டுடியோஸ்.

    எலி மாமான்னு கூப்பிடுகிறார்கள்

    எலி மாமான்னு கூப்பிடுகிறார்கள்

    தியேட்டர்களுக்கு சென்று பார்க்கும் போது ஏதோ பள்ளி விழாவுக்கு சென்றது போல் இருந்தது. தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். ஒரு தியேட்டரில் ஓரு சிறுவன் தனியாக ரசித்து படம் பார்த்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்து எலி மாமா என்று கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன். அவனை பார்க்கும் போது எனக்கு பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த படத்துக்கு குழந்தைகள் எளிதாக தொடர்புபடுத்திக்கொண்டார்கள். இது ஒரு வரப்பிரசாதம் போன்று ஆகிவிட்டது.

    குழந்தைகளுக்கு நல்ல செய்தி

    குழந்தைகளுக்கு நல்ல செய்தி

    மான்ஸ்டர் படம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறது. இந்த உலகம் எல்லோருக்குமானது, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும், எனும் செய்தியை கொண்டு சென்றிருக்கிறது. அது தான் இப்படத்தின் வெற்றி. இது எல்லாத்துக்கும் காரணம் இயக்குனர் நெல்சன் தான்.

    பாகுபலிக்கு நிகரான வெற்றி

    பாகுபலிக்கு நிகரான வெற்றி

    பாகுபலி படத்துக்கு பிறகு, மான்ஸ்டர் படத்திற்கு தான் இந்தளவுக்கு குடும்ப ஆடியன்ஸ் வருவதாக கூறிகின்றனர். மான்ஸ்டர் திரைப்படம், பாகுபலிக்கு நிகரான வெற்றியை பெற்றிருப்பது சந்தோஷமான விஷயம். மேலும் மேலும் நல்லப் படங்களை கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

    தயாரிப்பாளருக்கு நன்றி

    தயாரிப்பாளருக்கு நன்றி

    நன்னை கீழே தள்ளிவிட மாட்டேன் என இயக்குனர் நெல்சன் உறுதியளித்தார். உண்மையில் அடியில் இருந்த என்னை மேலே உயர்த்தி இருக்கிறார் நெல்சன். அதற்காக அவருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஏனென்றால், இடையில் விழ இருந்த எனது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கும் படம் மான்ஸ்டர்", இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    While speaking in the thanks giving meet of Monster, actor SJ Surya said that the movie lifted up his cinema career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X