ரன்வீர் சிங்கோட அதைப் பத்தி வருத்தப்படுற அளவுக்கு நாம ஒன்னும்.. மூடர்கூடம் இயக்குநர் நவீன் ட்வீட்!

சென்னை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அவருக்கு எதிராக வழக்குகள் பதிவாகின.

சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட போட்டோ மீம்களை பதிவிட்டு நெட்டிசன்கள் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோனையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மூடர்கூடம் இயக்குநர் நவீன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்லியாக மாறிய ரன்வீர்

பல்லியாக மாறிய ரன்வீர்

சுவற்றில் பல்லிகளோடு பல்லியாக நிர்வாண போட்டோஷூட் நடத்திய ரன்வீர் சிங்கை போட்டோ எடிட் செய்து ட்ரோல் மீம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்த ரன்வீர் சிங்கை கண்டபடி திட்டியும் விளாசியும் வருகின்றனர்.

டிரெஸ் சேகரிப்பு

டிரெஸ் சேகரிப்பு

சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று ரன்வீர் சிங்கிற்கு உடுத்த உடையே இல்லை என எண்ணி அவருக்கு டிரெஸ் சேகரித்து அனுப்பும் நூதன போராட்டத்தையும் நடத்தி ரன்வீர் சிங்கை வச்சு செய்து விட்டனர். மேலும், அவருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் போலீஸ் நிலையத்தில் புகார்களை கொடுக்க எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டன.

ரன்வீர் சிங் பத்தி

ரன்வீர் சிங் பத்தி

"ரன்வீர்சிங் பம் பத்தி வருத்தபடற அளவுக்கு நாம ஒன்னும் ஆடம்பர வாழ்க்க வாழல வைட். நாம வருத்தபட நெறய பிரச்சன இருக்கு! சோத்து பிரச்சன, வீட்டு பிரச்சன, வேல பிரச்சன.. நம்ம வாழ்க்கையே பிரச்சனதான்!" என மூடர்கூடம் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

இதே சாமியாரா இருந்தா

இதே சாமியாரா இருந்தா

ரன்வீர் சிங் பிரபலமான பாலிவுட் நடிகர் என்பதால், தான் இப்படி பலரும் அவரை ட்ரோல் செய்து டார்கெட் செய்கின்றனர். இதே அவர் ஒரு சாமியாரா இருந்தா, ஆடையே அணியாமல், தெருவில் கூட நடந்து போகலாம், ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விஷ்ணு விஷாலை மறந்துட்டீங்க

விஷ்ணு விஷாலை மறந்துட்டீங்க

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பற்றி மூடர்கூடம் நவீன் ட்வீட் போட்டுள்ள நிலையில், நம்ம கோலிவுட் நடிகர் விஷ்ணு விஷாலும் அதே போலத்தான் நிர்வாண போட்டோக்களை போட்டார். ஆனால், அவரை யாருமே கண்டு கொள்ளவில்லையே, அவரை பற்றி நீங்களும் ஏன் எதுவும் சொல்லல? என இயக்குநர் நவீனிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X