ஃபுல் பார்மில் சூர்யா.. அவரது 46ஆவது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் இவரா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது நவம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி சிவாவுக்கு பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சூர்யா படக்குழுவை நினைத்து உருகியிருக்கிறார்.
சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
இரண்டு பாகங்கள்: மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்க்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லருக்கு கிடைத்த விமர்சனம்: படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். மேலும் ட்ரெய்லரில் பாகுபலி வாடை ஹெவியாக அடிப்பதாகவும்; இதிலும் சிவா சொதப்பிவிடுவாரோ என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினர். ஆனால் ட்ரெய்லர் பட்டையை கிளப்புகிறது என்றும் படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்றும் சூர்யாவின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். படமானது நவம்பர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 44: கங்குவா படத்தை முடித்திருக்கும் சூர்யா இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். படத்தின் இன்ட்ரோ வீடியோவில் படு ஸ்டைலாக இருந்த சூர்யா இப்போது அதன் ஷூட்டிங்கை முடித்தும்விட்டார். தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமும் சூர்யாவின் லைன் அப்பில் இருக்கிறது.
மூடர் கூடம் நவீன்: இந்நிலையில் சூர்யாவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரது 46ஆவது படத்தை மூடர்கூடம் இயக்குநர் நவீன் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நவீன் இப்போது விஜய் ஆண்டனியை வைத்து அக்னி சிறகுகள் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கிறது. மூடர்கூடம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நவீன்; சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











