நீட்க்கு எதிரா போராடுறவங்களை ஏளனம் செய்யாதீங்க.. மோகன் ஜிக்கு பதிலடி கொடுத்த மூடர் கூடம் நவீன்

சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இயக்குநர்கள் பா. ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் பேசிய கருத்துகளுக்கு இயக்குநர் மோகன் ஜி சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது அந்த பதிவுக்கு இயக்குநரும் நடிகருமான 'மூடர் கூடம்' நவீன் தனது பாணியில் பதிலடி கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக, சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர்கள் பா. ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்றும், மாணவர்களின் குரலுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த பேச்சுக்கு இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்திருந்தார். குறிப்பாக, வெற்றிமாறனின் கருத்தை விமர்சித்த அவர், "நீட் வேண்டாம் என்றால் படிக்கிற பசங்க அதுவா பிழைத்துக்கொள்ளுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

Moodar Koodam Naveen Hits Back at Mohan G Defends Anti-NEET Protesters

இந்த நிலையில், மோகன் ஜியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் நவீன் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "மோகன் G அண்ணே... படிக்கிற பசங்க அதுவாக எல்லாம் பிழைச்சிக்கல அண்ணே. 60 வருடங்களாக இடஒதுக்கீடு, மதிய உணவுத் திட்டம், சத்துணவு, காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட தமிழ்நாடு அரசுகள் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால்தான், இந்தியாவிலேயே கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, "இந்தி திணிப்பு எதிர்ப்பு, குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு என பல போராட்டங்களின் மூலமாகத்தான் இந்த முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. போராட்டம்தான் நம்ம வாழ்க்கையே. நம்மை காப்பாற்றும் கடவுளுக்காக போராடும் நீங்கள், நம் சக மனிதர்களுக்காக போராடவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் போராடுபவர்களை ஏளனம் செய்ய வேண்டாம்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Moodar Koodam Naveen Hits Back at Mohan G Defends Anti-NEET Protesters

நவீனின் இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒருபுறம் மோகன் ஜியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், மறுபுறம் நவீனின் பதிவை வரவேற்பவர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருவதால், நீட் விவகாரம் தொடர்பான இந்த கருத்து மோதல் தற்போது சமூக வலைதளங்களில் மேலும் சூடுபிடித்துள்ளது.

பா. ரஞ்சித், வெற்றிமாறன், மோகன் ஜி, நவீன் என அடுத்தடுத்து திரையுலக பிரபலங்கள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதால், நீட் தேர்வு குறித்த விவாதம் அரசியல் தளத்தை தாண்டி சினிமா வட்டாரத்திலும் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X