twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சும்மா விட மாட்டாங்க போல.. சூர்யாவை மறைமுகமாக அரசியலுக்கு அழைக்கிறாரா மூடர்கூடம் நவீன்?

    |

    சென்னை: ரீலில் மட்டும் சமூகத்திற்காக போராடாமல், ரியலிலும் சமூகத்திற்காக போராடும் ஒரு சில நடிகர்களில் சூர்யாவுக்கு பெரிய பங்கு உள்ளது.

    நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவத்தால் மனம் நொந்து அவர் வெளியிட்ட அறிவிப்பு சாட்டை அடியாக விழுந்து சர்ச்சையையும் கிளப்பியது.

    நீதிபதிகளை அவதூறாக பேசிவிட்டார் என அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தேவையில்லை என ஓய்வு பெற்ற நீதிபதிகளே ஆதரவு தந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

     புது வீடியோவுக்கு இப்படியா புரமோஷன் பண்றது.. நாக்கை நீட்டி உதட்டை கடித்து.. அதகளம் செய்யும் நடிகை! புது வீடியோவுக்கு இப்படியா புரமோஷன் பண்றது.. நாக்கை நீட்டி உதட்டை கடித்து.. அதகளம் செய்யும் நடிகை!

    நீட் வேண்டாம்

    நீட் வேண்டாம்

    'நீட் தேர்வு' பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. 'கொரோனா தொற்று' போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது என தொடங்கும் அந்த கட்டுரையில், நீதித்துறை, அரசியல்வாதிகள், சமூகம் என பலவற்றையும் கேள்விகளால் விளாசி இருந்தார்.

    எதிர்ப்பும் ஆதரவும்

    எதிர்ப்பும் ஆதரவும்

    நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவருக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என ஏகப்பட்ட பேர் களமிறங்கி #IStandWithSuriya என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

    இயக்குநர் நவீன் பாராட்டு

    இயக்குநர் நவீன் பாராட்டு

    சூர்யாவின் இந்த கட்டுரையை படித்த மூடர்கூடம் இயக்குநர் நவீன், "இப்படி ஒரு அரசியல் சமூக உளவியல் தெளிவு நிறைந்த ஒரு கருத்தை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த நிதானித்த யோசனைக்குப்பின் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும்" என தனது பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

    அரசியல் அழைப்பு

    அரசியல் அழைப்பு

    ஆனால், இயக்குநர் நவீனின் இந்த பாராட்டு ட்வீட்டில், நடிகர் சூர்யாவை நேரடியாக அரசியலுக்கு அவர் அழைப்பது போன்றே உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும்" என்ற வரிகளும், "அரசியல் சமூக உளவியல் தெளிவு நிறைந்த ஒரு கருத்து" என்கிற வரிகளும் அதனை நிரூபிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

    நெருங்கும் தேர்தல்

    நெருங்கும் தேர்தல்

    2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளிப்பட்டிருக்கும் இது போன்ற துணிச்சலான கருத்துக்களால் நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? என்கிற கேள்வியும் இயல்பாகவே எழத்தான் செய்கிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா என 2021 தேர்தல் வேற லெவலில் களை கட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Suriya’s NEET statement goes viral and makes controversies also. Now Moodar Koodam director Navee praises and support for his statement.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X