நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'.. நம்ப முடியாத கிளைமாக்ஸில் இவ்ளோ பேரா? ஆச்சரியம்தான்!

By

சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத கிளைமாக்ஸ் காட்சி இடம் பெறுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம், மூக்குத்தி அம்மன். அவர் இதில் அம்மனாக நடித்துள்ளர்.

இதை என்ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் இயக்கி உள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம்

வேல்ஸ் ஃபிலிம்

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மவுலி, ஊர்வசி, அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சாடுவது போல

சாடுவது போல

இந்தப் படம், நூறு சதவிகிதம் சாமி படம்தான் என்று தெரிவித்து இருந்தார், ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் பரபரப்பை ஏற்படுத்தியது.சாமியின் பெயரால் ஏமாற்றுபவர்களைச் சாடுவது போல இந்தப் படம் உருவாக்கப் பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கார்பரேட் சாமியார்

கார்பரேட் சாமியார்

அதோடு மூக்குத்தி அம்மனாக, நயன்தாராவின் லுக்கும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படமும் ஓடிடியில் வெளியாகிறது. வரும் 14 ஆம் தேதி, தீபாவளியன்று டிஸ்னி+ , ஹாட்ஸ்டார் விஐபி-யில் வெளியாக இருக்கிறது. இதில் கார்பரேட் சாமியாராக தெலுங்கு நடிகர் அஜய் கோஷ் நடித்துள்ளார்.

மெகா கிளைமாக்ஸ்

மெகா கிளைமாக்ஸ்

இந்நிலையில், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் கிளைமாக்ஸை, 7500 துணை நடிகர்களை கொண்டு படமாக்கி உள்ளனர். இக்காட்சியை படமாக்குவது மொத்த படக்குழுவுக்கும் கடுமையான சவாலாக அமைந்ததாகவும் மிகக் குறுகிய காலத்தில் இதைப் படமாக்கியதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

லாக்டவுனுக்கு முன்பே

லாக்டவுனுக்கு முன்பே

அதிகமான நபர்களை கொண்ட இந்த காட்சியை, ஒரே நாளில் படமாக்கியுள்ளனர். லாக்டவுன் நடைமுறையில் இருந்தபோது, இவ்வளவு கூட்டத்தை கொண்டு படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை. அதற்கு முன்பே இந்தக் காட்சியை படமாக்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X