அவசர அவசரமாக மூக்குத்தி அம்மன் முழு லுக்கை ரிலீஸ் செய்ய இதுதான் காரணமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக்கில் நயன்தாராவுக்கு மீசை இருந்தது போன்ற தோற்றம் எழவே உடனடியாக முழு லுக்கையும் படக்குழு வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எல்.கே.ஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடிக்கும் இந்த படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இணைந்து இந்த படத்தை இயக்கி உள்ளனர்.
Recommended Video
ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவுக்கு அம்மன் லுக் செட்டாகவில்லை என மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.

முழு தரிசனம்
மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்துள்ள நயன்தாராவின் பாதி லுக்கை வெளியிட்ட ஆர்.ஜே. பாலாஜி, சற்று நேரத்திலேயே, நயன்தாராவின் முழு தரிசனத்தையும் வெளியிட்டார். கிரீடம், சூலம் என ராமநாராயணன் படங்களில் வரும் அம்மனாகவே நயன்தாரா தனது ரசிகர்களுக்கு அருள் பாலித்தார்.
நயன்தாராவுக்கு மீசை
பாதி லுக் வெளியான நிலையில், அதனை மிரர் இமேஜாக போட்டோஷாப் செய்த நெட்டிசன்கள், முழு லுக்காக மாற்றினர். ஆனால், மூக்குத்தியின் நிழல் இருபுறமும் பட்டு, நயன்தாரா மூக்குக்கு கீழே மீசை ஒன்று முளைத்திருந்தது. இதனை அறிந்த படக்குழு உடனடியாக முழு லுக்கையும் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
யாரு பெஸ்ட்
தமிழ் சினிமாவில் இதுபோன்ற சாமி படங்கள் சமீப காலத்தில் வெளியாக வில்லை. இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜியின் இந்த புதிய முயற்சியில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் தோன்றியுள்ளார். நயன்தாராவின் ரசிகர்கள் இந்த லுக்கை கொண்டாடி வரும் நிலையில், ரம்யா கிருஷ்ணன் தான் அம்மன் லுக்கில் பெஸ்ட் என்ற போட்டியும் எழுந்துள்ளது.
சினேகா மாதிரி இருக்கு
நேற்று வெளியான நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக்கை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இதைப் பார்த்தா நயன்தாரா மாதிரி தெரியல, சினேகா மாதிரி இருக்கு என்றும் சில ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஃபர்ஸ்ட் லுக் எடிட் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இம்சை அரசி 24ம் புலிகேசி
நயன்தாராவின் மிரர் இமேஜ் போஸ்டரில், அவருக்கு மீசை வந்ததை பார்த்து, கலாய்த்து வரும் நெட்டிசன்கள், இம்சை அரசி 24ம் புலிகேசி மாதிரி இருக்கு எனவும் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். படத்தில் அம்மனாக நயன் வருவாரா? அல்லது வெறும் போஸ்டருக்கு மட்டும் தானா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எங்க மூக்குத்தி அம்மன்
அம்மன் வேடத்திற்கு ரம்யா கிருஷ்ணன் தான் சரியான தேர்வு என்று ரம்யா கிருஷ்ணன் ரசிகர்கள் கொடி பிடித்து வரும் நிலையில், பாளையத்தம்மன் உள்ளிட்ட சில படங்களில் அம்மனாக நடித்துள்ள மீனாவும் அம்மன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தினார். இது தான் எங்க மூக்குத்தி அம்மன் என மீனா ரசிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது
ஹேர் கலரிங் பண்ண அம்மனை எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா என்றும், இதை பார்த்துட்டு, யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது கடவுளே என்றும் நெட்டிசன்கள் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக்கை பயங்கரமாக மீம்ஸ்களை போட்டு ஓட்டி வருகின்றனர். நல்ல வேளை மீனா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் நடித்த காலத்தில் எல்லாம் ட்விட்டர் இல்லை.
என்னது ஐஸ்க்ரீம் வேணுமா
எல்லா ட்ரோல்களையும் விட இந்த ரசிகர் வச்சு செய்துள்ளார் என்றே சொல்லலாம். "நீங்களே நியாயமா சொல்லுங்க.. நயன் ஃபேஸ் பார்த்தா அம்மன் மாதிரியா இருக்கு.. ஏதோ எனக்கெங்க ஐஸ் க்ரீம்னு கேக்குற மாதிரி இருக்கு" என கமெண்ட் போட்டுள்ளார். நிச்சயம் இந்த படத்தில் அம்மனாகவே நயன் நடித்திருக்க மாட்டார். காமெடி என்டர்டெயின்மென்ட் கலந்து தான் படம் இருக்கும் எனவும் ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











