அப்படியாவது நாளைக்கு மேட்ச் பாருங்க.. மூக்குத்தி அம்மன் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் அசத்தல் டிரைலர் நாளை வெளியாகிறது.

வரும் தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மூக்குத்தி அம்மன் ரிலீஸ் ஆகிறது என்கிற அப்டேட்டை ஆர்.ஜே. பாலாஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை டிரைலர் வெளியாகிறது என்கிற சரவெடி அப்டேட்டையும் தற்போது போட்டுள்ளார்.

நாளை நயன்தாரா தரிசனம்

நாளை நயன்தாரா தரிசனம்

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா எப்படி கலக்கி இருக்கிறார் என்பதை ரசிகர்கள் நாளை கண்டு ரசிக்கலாம். மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் அந்த படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வேற லெவல் டிரெண்டிங்

வேற லெவல் டிரெண்டிங்

#MookuthiAmman என்ற ஹாஷ்டேக், ஆர்.ஜே. பாலாஜியின் அறிவிப்பைத் தொடர்ந்து வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. நயன்தாரா போட்டோ வந்தாலே வைரலாகி விடும். அவரது படத்தின் டிரைலர் அப்டேட்னா சும்மாவா? அதுவும் இப்போ வெளியிட்டுள்ள புது போஸ்டரும் செம சூப்பரா இருக்கு..

சிஎஸ்கே மேட்ச் இடையே

சிஎஸ்கே மேட்ச் இடையே

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கமெண்டேட்டராக கலக்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி, தனது புதிய படமான மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலரை, நாளை நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் நடுவே வெளியிட உள்ளாராம்.

அப்படியாவது மேட்ச் பாருங்க

அப்படியாவது மேட்ச் பாருங்க

போன மேட்சில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மரண அடி வாங்கி, பிளே ஆஃப்க்கே செல்ல முடியாமல் ஆன நிலையில், இதுக்கு மேல எதுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் எல்லாம் பார்த்துக்கிட்டு என ரசிகர்கள் அப்செட்டாகி உள்ள நிலையில், மூக்குத்தி அம்மன் டிரைலர் போடுறோம் அதுக்காகவாவது மேட்ச் பாருங்க என பாலாஜி விளம்பரம் செய்வது போல உள்ளது என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

தலைவன் வரான்.. வரான்

தலைவன் வரான்.. வரான்

சில போட்டிகளில் ஆர்.ஜே. பாலாஜியின் லொட லொட வாய் கமெண்டரி கேட்காமல் போர் அடித்துப் போன ரசிகர்கள், பாலாஜி வூடி பாபா மந்திரம் போடாததால், சென்னை அணி இப்படி ஒரு படு தோல்வியை சந்தித்தது என்றும் மீம் போட்டு வந்தனர். இந்நிலையில், நாளை மீண்டும் தலைவன் கமெண்டரிக்கு வரான்.. வரான் என கே.ஜி.எஃப் ரேஞ்சுக்கு மீம் போட்டு அசத்தி உள்ளனர்.

இது முத்து பட சீன்

இது முத்து பட சீன்

தலைவாழை இலையில் நயன்தாரா அம்மன் ஃபுல் கட்டு கட்டுறதும், பக்கத்தில ஆர்.ஜே. பாலாஜி ஒரே ஒரு வடையுடன் உட்கார்ந்து இருக்கும் இந்த டிரைலர் ரிலீஸ் அறிவிப்பு போஸ்டரை பார்த்த ரசிகர்கள், இது முத்து படத்தில், மீனா, ரஜினி கேரளாவில் சாப்பிடும் சீன் தான, சுட்டுட்டீங்களா பாஸ் என மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிகில் ஒரு வருஷம்

பிகில் ஒரு வருஷம்

தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி பிகில் படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், சரியாக பிகில் ஒரு ஆண்டு கொண்டாட்டம் கொண்டாட உள்ள நிலையில், நாளை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் டிரைலரும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X