twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியா- சீனா கற்பனைப் போர் குறித்த கதை சொல்லும் மூன்றாம் உலகப்போர்!

    By Mayura Akilan
    |

    ஆர்டின் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பாக டி.ஆர்.எஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் தயாரிக்கும் படம் மூன்றாம் உலக போர்.

    பாலை படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை அண்ணாமலை எழுதுகிறார். பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

    2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. இந்தப் போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி மூன்றாம் உலகப் போர் நடக்கிறது? என்பது தான் 'மூன்றாம் உலகப் போர்' படத்தின் கதை.

    'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அகிலா கிஷோர்தான் மூன்றாம் உலகப்போர் படத்தின் நாயகி.

    இன்ஜினீயரிங் பட்டதாரியான அகிலா கிஷோர் பெங்களூரைச் சார்ந்தவர். கன்னடத்தில் 'பதே பதே' படத்தில் அறிமுகமான அகிலா, கன்னடம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் 'மூன்றாம் உலகப் போர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    Moondram Ulaga Por : Story of fictional India China war

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்க உள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    “Moondram Ulaga Por”, an upcoming Tamil action-drama, is a story of an imaginary war between India and China, says its director Sugan Karthi. He said it was challenging to script the story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X