மூன்று முகம்... ஒரு வழியாக ரஜினி படத் தலைப்பைக் கைப்பற்றினார் விஜய்!!

By Shankar

ரஜினியின் புகழ்பெற்ற படங்களின் தலைப்புகளைக் கவர்வதில் கோடம்பாக்கத்தில் பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. டாப் நடிகர்கள் முதல் சாதா நடிகர்கள் வரை அவரது டைட்டிலுக்கு மோதுகிறார்கள்.

இதில் விஜய் மட்டும் விலக்காக இருப்பாரா? அவருக்கு போக்கிரி ராஜா படத் தலைப்பின் மீது காதல்... வைக்க முடியவில்லை. போக்கிரி என்று வைத்தார். அண்ணாமலை என்று வைத்தால் ரசிகர்கள் ஓட்டுவார்கள் என்பதால், வேலாயுதமானார். பாயும் புலியை பயன்படுத்த முடியவில்லை.. புலி என்று வைத்துவிட்டார்.

Moondru Mugam: Finally Vijay captures a Rajini movie title

விஜய்க்கு ரொம்ப நாளாகவே மூன்று முகம் தலைப்பின் மீது அப்படி ஒரு ஆசை. ஏற்கெனவே சில முறை சத்யா மூவீஸிடம் விஜய்க்காக இயக்குநர்கள் கேட்டுப் பார்த்தார்கள். அப்போது கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்துக்கு மூன்று முகம் எனத் தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அநேகமாக மூன்று வேடங்களிலோ அல்லது கெட்டப்புகளிலோ விஜய் நடிக்கக் கூடும். தலைப்போட நிறுத்திக் கொள்வாரா அல்லது வழக்கம்போல கதையிலும் கைவைப்பாரா அட்லீ என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X