Just In
- 36 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 49 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 56 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Sports
ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!
- Lifestyle
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மூனு காலு வாகனம் பாடல்.. மேடையில் பாடி அசத்திய திண்டுக்கல் ஐ லியோனி !
சென்னை : கன்னி மாடம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், மூனு காலு வாகனம் பாடலை பாடி அசத்தினார் திண்டுக்கல் ஐ லியோனி.
நடிகர் போஸ் வெங்கட் நடிகரில் இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் கன்னி மாடம். இந்த படத்தை முதன் முதலாக கதை எழுதி இயக்கி இருக்கிறார் போஸ் வெங்கட். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவுடன் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி மற்றும் சமுத்திரகனி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அழையா விருந்தாளியாக திண்டுக்கல் ஐ லியோனியும் இந்த விழாவில் கலந்து கொண்டார் . இவர் கலந்து கொள்ளும் முதல் இசை வெளியீட்டு விழா இதுவே ஆகும் .

கன்னி மாடம் படத்தில் ஒரு முக்கிய பாடலை பாடகர் அந்தோனிதாசன் பாடியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கரும் மூனு காலு வாகனம் எனும் பாடலை பாடியிருக்கிறார். படத்தில் பாடல்கள் நல்ல அளவில் வந்திருக்கிறது ரசிகர்கள் படத்தின் பாடல்களை இணையத்தில் பெரிய அளவில் கேட்டு வருகின்றனர்.
விழாவில் பேசிய ஆடுகளம் முருகதாஸ் பெரிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெருவது எளிதான விசயம் சிறிய பட்ஜெட் படங்கள், பட்டம் போல மாஞ்சா போட்டு ஏற்றுவதற்குள்ளே ஆயிரம் பிரச்சினைகளை சந்தித்து விடும். இதனால் இந்த சிறிய பட்டத்தை நீங்கள் தான் ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொண்டார் .

இந்த விழாவில் திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டார். இவர் தற்போது ரோபோ சங்கருடன் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார். பட்டிமன்ற பேச்சாளரான இவர் 22 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் படத்தில் நடிக்கிறார் . ரோபோ சங்கர் விழாவிற்கு அழைப்பு விடுத்ததாலும் போஸ் நல்ல சகோதரர் என்பதாலும் விழாவில் கலந்து கொண்டதாக கூறினார்.
மேலும் லியோனி மேடையிலே ரோபோ சங்கர் பாடிய மூனு காலு வாகனம் பாடலை பாடி, பாடல் மிகவும் அருமையாக வந்திருப்பதாக கூறினார். படத்திற்கு ஹரி சாய் இசையைமைத்து உள்ளார். ஆடுகளம் முருகதாஸ் பேசும் போது கூட இசையமைப்பாளரை ஏழைகளின் ஏ.ஆர்.ரகுமான் என்று புகழ்ந்திருந்தார் .

கன்னி மாடம் படத்தை ரூபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்தில் ஶ்ரீராம் கார்த்திக், சயா தேவி ,ஆடுகளம் முருகதாஸ், மைம் கோபி ,சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.