கௌதம் மேனனின் மூணு முப்பத்தி மூணு திகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை : கௌதம் மேனன், சாண்டி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது மூணு முப்பத்தி மூணு படம்.

திகில் படமாக வித்தியாசமான தலைப்பு மற்றும் கதைக்கருவுடன் இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் 21ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டைரக்டர் கௌதம் மேனன்

டைரக்டர் கௌதம் மேனன்

விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட சூப்பர் படங்களை கொடுத்த இயக்குநர் கௌதம் மேனன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலீஸ் அதிகாரியாக தோன்றி பட்டையை கிளப்பினார்.

ருத்ர தாண்டவம் படத்தின் வில்லன்

ருத்ர தாண்டவம் படத்தின் வில்லன்

ருத்ர தாண்டவத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மூணு முப்பத்தி மூணு படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வித்தியாசமான தலைப்பு மட்டுமின்றி வித்தியாசமான திகில் கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகியுள்ளது.

நம்பிக்கை சந்த்ரூ இயக்கம்

நம்பிக்கை சந்த்ரூ இயக்கம்

படத்தில் கௌதம் மேனனுடன் சாண்டி, சரவணன், ரமா, ரேஷ்மா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். நம்பிக்கை சந்த்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹர்ஷவர்தன். படத்தின் டீசர் சில வாங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.

Recommended Video

MUSIC DIRECTOR ஆன அனுபவம் |CLOSE CALL WITH SINGER V.V.PRASANNA | FILMIBEAT TAMIL
21ம் தேதி ரிலீஸ்

21ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் படம் உலகளவில் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறப்பான திகில் அனுபவத்தை கொடுத்து தியேட்டர்களில் இந்தப் படம் கட்டிப் போடும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X