திரையரங்குகளில் ரிலீசாகும் மூணு முப்பத்தி மூணு படம்... ரிலீஸ் தேதி வெளியீடு!

சென்னை : நடிகர் சாண்டி, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மூணு முப்பத்தி மூணு.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

மூணு முப்பத்தி மூணு படம்

மூணு முப்பத்தி மூணு படம்

நடன இயக்குநர் சாண்டி கதாநாயகனாக நடித்துள்ள படம் மூணு முப்பத்தி மூணு. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே ஒரு பங்களாவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவுற்று படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து கடந்த அக்டோபர் 21ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது.

ரிலீஸ் குறித்து அறிவிப்பு

ரிலீஸ் குறித்து அறிவிப்பு

திரையரங்குகள் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் சாண்டியுடன் கௌதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கௌதம் மேனன் நடிப்பு

கௌதம் மேனன் நடிப்பு

சிறப்பான இயக்குநராக உள்ள கௌதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார்.

வித்தியாசமான கதைக்களம்

வித்தியாசமான கதைக்களம்

இந்நிலையில் இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் தலைப்பும் வித்தியாசமாக உள்ளது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. படம் வித்தியாசமான ஹாரர் கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கை சந்த்ரூ இயக்கம்

நம்பிக்கை சந்த்ரூ இயக்கம்

இந்தப் படத்தை நம்பிக்கை சந்த்ரூ இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும். அந்த வகையில் இந்தப் படம் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X