மிரட்டும் 3 :33 படம்... டீசரை வெளியிட்ட இயக்குநர் ஏஆர் முருகதாஸ்
சென்னை : சாண்டி, கௌதம் மேனன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மூணு முப்பத்தி மூணு.
திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டைரக்டர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

திகில் படம்
டைரக்டர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் படம் மூணு முப்பத்தி மூணு. வித்தியாசமான தலைப்பு மட்டுமின்றி திகில் படமாகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் நடிப்பு
இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சாண்டி, சரவணன், ரமா, ரேஷ்மா பசுபெலட்டி, மைம் கோபி மற்றும் ஷ்ருதி செல்வம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்.

ஏஆர் முருகதாஸ் வெளியிட்டார்
பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டுள்ளார்.

வித்தியாச கதைக்களம்
மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். படத்தின் டீசர் மிகவும் மிரட்டலாக உள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளது டீசரின் மூலம் வெளிப்படுகிறது. மற்றொரு வித்தியாசமான ஹாரர் மூவியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். படம் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











