எத்தனை பேர் வந்தாலும் நின்னு பாடுவேன்.. மூன் வாக் படத்தில் ஏ.ஆர். ரகுமான் செய்த தரமான 5 சம்பவங்கள்!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் திரை இசை ஜாம்பவான். இவரது இசையில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்களுக்கு படத்தின் மீது தனி கவனம் குவிந்துவிடும். அப்படி இவரது இசையில் அடுத்து வெளியாக உள்ள படங்களில் ஒன்று மூன் வாக். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடலகளின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மூன் வாக் படத்தில் பிரபு தேவா நடித்துள்ளார். படத்தை தயாரித்து, கதை எழுதி இயக்கி உள்ளவர், மனோஜ் N S. இந்திய சினிமாவின் இரு பெரும் துருவங்களான இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நடன புயல் பிரபு தேவா மாஸ்டர் என இருவரையும் மீண்டும் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக படத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளோம் என்று இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும்போது, பாடல்களின் போஸ்டர்களை அறிமுகப்படுத்தும்போது அவர் தெரிவித்த ஒரு தகவல் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், மொத்த திரையுலகத்தினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது, படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் ஏ. ஆர். ரகுமான் தான் பாடியுள்ளார். முதலில் இந்த முடிவுக்கு ஏ. ஆர். ரகுமான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நான்கு மாத காலம் நான் விடாமல் அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் அவர் ஒப்புக் கொண்டார். நான் அவரிடம் கேட்டதும், உங்களுக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று கிண்டலாக கூறினார். ஆனால் நான் அவரை விடுவதாக இல்லை. ஒரு வழியாக அவர் சம்மதம் தெரிவித்தார் என்று கூறினார்.
வரலாற்றில் முதல் முறையாக: படத்தில் ஏத்து என்ற பாடல் கொண்டாட்டத்தின் வடிவமாகவும், இரண்டாவது பாடல் மெக்ரீனா, இது நட்பைக் கொண்டாடும் பாடல். மூன்றாவது பாடலான மைலே பாடலானது கடின உழைப்பின் கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது, ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறோம். காதலை கொண்டாடுவதற்கு டிங்கா என்ற பாடலை நான்காவது பாடலாக உருவாக்கி உள்ளோம். ஜிகர் என்ற ஐந்தாவது பாடல் கொண்டாட்டத்தின் பாடலாக உருவாக்கி உள்ளோம். இது அனைவரது வாழ்க்கையோடும் ஒத்துப்போகும் பாடலாக இந்த பாடல் இருக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
காரணம்: ஏன் இந்த ஐந்து பாடல்களையும் ரகுமானைப் பாட வைத்தீர்கள் என்று கேட்டதற்கு, இந்த படமே ஏ.ஆர். ரகுமான் மற்றும் பிரபுதேவாவுக்காக எடுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்த படத்தில் வேறு ஒருவரை பாட வைப்பது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று என்று கூறினார்.

எனது பொறுப்பு: இது குறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், " அனிருத்தை நான் காப்பாற்றி விட்டேன் என்பது போல அவர் பார்க்கிறார் என்று கிண்டலாக கூறினார். தொடர்ந்து பேசுகையில், ஒரு கம்போஸராக இசையமைப்பாளராக ஒரு பாடலை யார் பாடினால் சரியாக இருக்குமோ அவர்களைப் பாட வைக்க வேண்டியது எனது கடமை மற்றும் பொறுப்பு. இது போல 10 காரணங்களை நான் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவர் அதை கேட்பதாக இல்லை. கடைசியாக அவரது அன்புக்காக அனைத்து பாடல்களையும் நானே பாடிவிட்டேன்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











