நிவின் பாலி பிறந்தநாள்... மூத்தன் ட்ரெயிலர் நாளை ரிலீஸ் - ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
திருவனந்தபுரம்: நிவின் பாலியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அவர் நடித்து கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள மூத்தன் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகிறது. இது நிவின்பாலியின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைய உள்ளது. இந்த படத்தின் டீசர் இதற்கு முன்பே வெளியாகி லட்சக்கணக்கான ரசிகர்களின் பார்வையை சென்றடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியான நிலையில் நாளை ட்ரெயிலர் ரிலீஸ் ஆகிறது.
கீத்து மோகன்தாஸ் மலையாள திரையுலகில் மிக பிரபலமான நடிகை. இவர் சத்யராஜ், சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் இதற்கு முன் இரு படங்களை இயக்கி உள்ளார். மளையாளத்தில் கேள்குன்னுன்டூ எனும் குறும்படத்தையும் இந்தியில் லையர்ஸ் டைஸ் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ உடன் இணைந்து தயாரித்துள்ளார் நடிகர் மற்றும் இயக்குநரான அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக நமக்கெல்லாம் அறிமுமானவர். இந்த படத்தின் ஹிந்தி டப்புக்கு அனுராக்கே வசனம் எழுதியுள்ளார்.
பிரேமம் நிவின் பாலியை மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்து போனது. அவரது லவ் ஆக்சன் டிராமா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது அதில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேர்பை பெற்றது. அதற்கு பின்பு இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரலீஸாகும் முன்னே டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது அங்கு நல்ல பாரட்டுகள் கிடைத்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு மலையாள திரைப்படத்திற்கு பிறகு, இந்த ஆண்டு டிஐஎஃப்எஃப்பில் (TIFF) திரையிடப்பட்ட இரண்டாவது மலையாள படம் மூத்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நிவின்பாலியின் பிறந்தநாள் பரிசாக நாளை அக்டோபர் 11ஆம் தேதியன்று மூத்தன் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகும் என இயக்குனர் கீத்து மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நிவின் பாலியின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











