மாஸ்டர் மைண்ட்.. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடும் சிபி.. டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வாரா?

சென்னை: ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிபி வார்டனாக மாறியதில் இருந்தே ஸ்கோர் பண்ண ஆரம்பித்து விட்டார்.

நாமினேஷனில் இருந்து தப்பிக்க கடந்த வாரம் முதல் ஆளாக நம்பர் ஒன் இடத்தில் ஏறி நின்ற சிபி இந்த வாரமும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கெத்து காட்டி வருகிறார்.

சிபியின் மாஸ்டர் மைண்ட் தான் முதல் நபராக வெளியே அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மோதி விளையாடும் சிபி

மோதி விளையாடும் சிபி

அக்‌ஷராவுடன் மோதல், ராஜுவுடன் கோல் போட்டு விளையாடும் விளையாட்டில் மோதி வெற்றி பெற்றது. ரேங்கிங் டாஸ்க்கில் முதல் இடத்தில் நம்பிக்கையுடன் ஏறி நின்று நிரூப்புடன் விவாதத்தில் வென்று அந்த இடத்தில் தன்னை தக்க வைத்தது என சிபி சிறப்பாக விளையாடி வருகிறார்.

மாஸ்டர் மைண்ட்

மாஸ்டர் மைண்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது பிசிக்கல் டாஸ்க் விளையாட்டு அல்ல இதுவொரு மாஸ்டர் மைண்ட் கேம் என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு விளையாடி வருகிறார். யாரிடமும் எமோஷனலாக அட்டாச் ஆகவில்லை. அதே போல கருப்பு ரோஜாவை அதிக நபர்கள் நாமினேட் செய்த நிரூப்புக்கு கொடுப்பதே சரியான விஷயம் என ஒவ்வொரு முறையும் பாயின்ட்டை பிடித்து பேசி அடித்து நொறுக்கி வருகிறார்.

கடைசி வரை போராட்டம்

கடைசி வரை போராட்டம்

முதலில் நிரூப் வெளியேறிய நிலையில், அடுத்ததாக பாவனி மற்றும் தாமரை வெளியேறினார்கள். தற்போது ராஜு மற்றும் பிரியங்கா வெளியேறி உள்ளனர். அடுத்த போட்டியில் அமீரை வெளியேற்றும் முயற்சியிலேயே சிபி அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஒருவேளை பிசிக்கல் டாஸ்க் வந்தால் சஞ்சீவ் வெளியேறி அமீர் மற்றும் சிபி மோதும் சூழல் உருவாகும்.

டிக்கெட் டு ஃபினாலே

டிக்கெட் டு ஃபினாலே

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதல் நாளில் இருந்து 87 நாட்கள் கடந்து இருக்கும் சிபிக்கு டிக்கெட் டு ஃபினாலே நிச்சயம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் அதிகமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இடையில் வந்த அமீர் மற்றும் சஞ்சீவுக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைத்தால் அது சரியாக இருக்காது என்றும் கருதுகின்றனர்.

Recommended Video

#BiggBoss5 டைட்டிலை கைப்பற்ற எல்லோரும் நடிக்கிறாங்க… போட்டுடைத்த போட்டியாளர்கள்!
சோமசேகரா

சோமசேகரா

கடந்த சீசனில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோமசேகர் தான் வெற்றி பெற்று முதல் நபராக ஃபைனல் வாரத்திற்கு நுழைந்தார். ஆனால், கிராண்ட் ஃபினாலேவில் முதல் நபராக வெளியேற்றப்பட்டதும் சோமசேகர் தான். அதே நிலைமை சிபிக்கு வருமா? அல்லது அடுத்த இரு வாரங்களில் ரசிகர்களின் ஆதரவு பெருகி வெற்றி கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X