சைஃப் அலி கான் முதல் மர்லன் பிராண்டோ வரை.. ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு வாழ்ந்த பெரிய குடும்பஸ்தர்கள்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சமீபத்தில் அவரது மூத்த மகள் சாரா அலி கானின் 25வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இரண்டாவது மனைவியும் நடிகையுமான கரீனா கபூரின் கர்ப்ப செய்தி வெளியாகி வைரலானது.

நான்காவது குழந்தையின் வரவுக்காக காத்திருக்கும் சைஃப் அலி கானை போல பெரிய குடும்பஸ்தர்கள் குறித்து சின்னதா ஒரு ரவுண்டப் பார்க்கலாம் வாங்க.

நாலாவதுக்கு வெயிட்டிங்

நாலாவதுக்கு வெயிட்டிங்

1991ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு நடிகை சாரா அலி கான் மற்றும் இப்ராஹிம் அலி கான் என இரண்டு வாரிசுகள் உள்ளனர். 2004ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து கொண்ட சைஃப் அலி கான், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு தைமூர் என்ற மகன் உள்ள நிலையில், நான்காவாது குழந்தைக்கு தந்தை ஆகும் யோகம் சைஃப் அலி கானுக்கு அடித்துள்ளது.

இந்த பாக்கியம்

இந்த பாக்கியம்

இதே போல 4 குழந்தைகளுக்கு தந்தையான பாக்கியம் மேலும், சில பிரபலங்களுக்கு வாய்த்துள்ளது. வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், ஆலியா பட்டின் அப்பா மகேஷ் பட், கிம் கர்தாஷியனின் கணவர் கன்யே வெஸ்ட், டேவிட் பெக்காம், ரோஜர் ஃபெடரர் மற்றும் கிறிஸ்டியனோ ரொனால்டோ உள்ளிட்ட பிரபலங்களும் 4 குழந்தைகளுக்கு அப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

3 பொண்டாட்டிக்காரர்

3 பொண்டாட்டிக்காரர்

ஷெர்லாக் ஹோம்ஸ், ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜூட் லா, கடந்த மாதம் தனது மனைவி பிலிப் கோயன் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்ற சந்தோஷ செய்தியை கூறினார். ஏற்கனவே இரு பெண்களுடன் இவருக்கு ஏற்பட்ட உறவில், மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.

6 குழந்தைகள்

6 குழந்தைகள்

ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாரான ஏஞ்சலினா ஜோலி, ஜானி லீ மில்லர், பில்லி பாப் தார்ண்டன் மற்றும் பிராட் பிட் என மூன்று கணவர்களை திருமணம் செய்துள்ளார். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஏஞ்சலினா ஜூலி இதில், 3 குழந்தைகளை பெற்றும் 3 குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.

முதல் குழந்தைக்கு 40.. கடைசிக்கு 3 வயசு

முதல் குழந்தைக்கு 40.. கடைசிக்கு 3 வயசு

பிரேவ் ஹார்ட், அபோகலிப்டா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற மெல் கிப்சனுக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர். 7 ஆண் குழந்தைகளுக்கும், 2 பெண் குழந்தைகளுக்கும் இவர் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த மகனும் ஹாலிவுட் நடிகருமான மிலோ கிப்சனுக்கு 40 வயதாகிறது. கடந்த 2017ம் ஆண்டு பிறந்த 9வது குழந்தைக்கு 3 வயதாகிறது.

10 குழந்தைகள்

10 குழந்தைகள்

ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் எடி மர்ஃபி கடந்த 2018ம் ஆண்டு 10வது குழந்தைக்கு தந்தையான செய்தியை மீடியாக்களுக்கு தெரிவித்து உற்சாகமடைந்தார். 59 வயதாகும் இவருக்கு 30 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். இவரும் ஹாலிவுட்டில் பெரிய தலைகட்டுத் தான் போல..

காட் ஃபாதருக்கு 14

காட் ஃபாதருக்கு 14

உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள மறைந்த நடிகர் மர்லன் பிராண்டோவுக்கு 14 குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியுமா? மூன்று மனைவிகளை மணந்த இந்த காட்ஃபாதர் நடிகர் 11 குழந்தைகளை பெற்றும், 3 குழந்தைகளை தத்தெடுத்தும் அனைத்து திரையுலகினருக்கும் டஃப் கொடுக்கும் அளவுக்கு இதிலும் லீடிங்கில் உள்ளார். அப்படியே நம்ம ஊர் பிரபலங்கள் பத்தியும் சொல்லுங்களேன் என நீங்க கேட்பது புரிகிறது. ஆனால், நமக்கு எதுக்கு உள்ளூர் வம்பு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X