சினிமா பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பரில் வெளியாக வரிசை கட்டி காத்திருக்கும் படங்கள்!

சென்னை : டிசம்பர் மாதம் திரைக்கு வர பலத்திரைப்படங்கள் வரிசைக்காட்டி காத்து இருக்கின்றன.

கொரோனாவின் 2வது அலை தீவிரமானதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து திரையரங்குகள் திறக்கப்பட்டு டாக்டர், அண்ணாத்த, மாநாடு போன்ற திரைப்படங்கள் வெளியாகின.

இதையடுத்து, வெளியாகாமல் இருந்த பல திரைப்படங்கள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன.

ஜிபி பிரகாஷ்

ஜிபி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர் திரைப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்தை சதீஷ் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ளார்.

தள்ளிப்போகாதே

தள்ளிப்போகாதே

அதர்வா நடிப்பில், ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய உள்ள 'தள்ளிப்போகாதே' திரைப்படம் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதர்வாவின் மற்றொரு திரைப்படமான 'குருதி ஆட்டம்' டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 10ந் தேதி ரிலீஸ்

டிசம்பர் 10ந் தேதி ரிலீஸ்

புளு சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் திரைப்படமும் டிசம்பர் 10ந்தேதி வெளியாக உள்ளது. டிசம்பர் 3ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் திரையரங்கு கிடைக்காததால் டிசம்பர் 10ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ்

முருங்கைக்காய் சிப்ஸ்

அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ரேஷ்மா மற்றும் பாக்கியராஜ் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டிசம்பரர் 9ந் தேதி

டிசம்பரர் 9ந் தேதி

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார்,அபர்ணதி இணைந்து நடித்துள்ளனர். ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9ந் தேதி வெளியாகி உள்ளது.

டிசம்பரில்

டிசம்பரில்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.இப்படத்தை டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 17ந் தேதி

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும் மரம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

பல படங்கள்

பல படங்கள்

பார்டர், பிளான்பண்ணி பண்ணணும், பிசாசு 2, கொம்பு வச்ச சிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களிலும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X