வரிசை கட்டும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்கள்!
தமிழ் சினிமாவில் ஒரே பாணியில் (ஜானரில்) ஒரு குறிப்பிட்ட சீசனில் தொடர்ந்து படங்கள் வரும். அப்படி சமீபகாலமாக மெடிக்கல் த்ரில்லர் வகை படங்கள் வரிசைகட்டுகின்றன.
தீபாவளிக்கு வெளியான மெர்சல் படமே மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது தான். மூன்று வேடம், பழிவாங்கல் என்று கமர்ஷியலாக்கி இருந்தார்கள்.
இந்த ஆண்டு ஏற்கெனவே இதுவரை குற்றம் 23, யாக்கை என்று இரண்டு மெடிகல் க்ரைம் த்ரில்லர்கள் கவனிக்க வைத்தன.

வேலைக்காரன் டென்சன்
அந்த வகையில் அடுத்து வெளியாகவிருக்கும் வேலைக்காரன் படமும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் தானாம்.

அப்பாடா ரெண்டும் வேற வேற
மெர்சல் படத்தின் கதையை எதிர்நோக்கி காத்திருந்த வேலைக்காரன் படக்குழு மெர்சலை பார்த்ததும் இரண்டுக்கும் பெரிய தொடர்பு இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்களாம்.

காக்கிச் சட்டை - என்னை அறிந்தால்
இப்படித்தான் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படமும், அஜித் நடித்த என்னை அறிந்தால் படமும் ஒரே நேரத்தில் வெளியான ஒரே மாதிரியான கதையோடு அமைந்திருந்தன. அவையும் மெடிகல் க்ரைம் த்ரில்லர்கள்தான்.

மேலும் இரண்டு...
வேலைக்காரன் மட்டுமல்லாது நெஞ்சில் துணிவிருந்தால், பொட்டு இரண்டுமே மெடிகல் க்ரைம் தொடர்பான கதைகள் தானாம். இதில் பொட்டு ஹாரர் படம்.


Click it and Unblock the Notifications











