"ஹீரோக்களுக்கு அதிகமா கொடுக்குறது சரிதான்" - நாயகி அனுஷ்காவே சொல்லியாச்சு!

By Vignesh Selvaraj

சென்னை : பொதுவாக கதாநாயகிகளின் சம்பளம் ஒரு மடங்கு ஏறினால் ஹீரோக்களின் சம்பளம் சிலபல மடங்குகள் ஏறுவது வாடிக்கை தான்.

சினிமா உலகில் இந்த சம்பள வித்தியாசம் குறித்து அவ்வப்போது சில நாயகிகள் முணுமுணுப்பதுண்டு.

ஆனால், நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்கும் அனுஷ்கா, ஹீரோக்களுக்கு வழங்கப்படும் அதிக சம்பளம் நியாயமே எனக் கூறியிருக்கிறார்.

ஹீரோக்களுக்கு மட்டும்

ஹீரோக்களுக்கு மட்டும்

ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்கள் நடித்தாலும் பாரபட்சமாக ஆண்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், சினிமா உலகில் அவ்வப்போது நாயகிகள் பேசுவார்கள்.

அனுஷ்கா கருத்து

அனுஷ்கா கருத்து

ஹீரோவுக்கு சமமாக மொத்தப்படத்தையும் தாங்கிப்பிடிக்கும் நடிகை அனுஷ்கா, இந்த விஷயத்தில் ஹீரோக்களின் பக்கம் தான் நிற்கிறார். நேற்று வெளியாகியுள்ள அவரது 'பாகமதி' படத்தின் ப்ரொமோஷனுக்காக சமீபத்தில் கேரளாவுக்கு சென்றிருந்த அவர், இந்த சம்பள முரண்பாடு குறித்து கேட்கப்பட்டபோது, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கெட்டபெயரையும் ஏற்பது ஹீரோ

கெட்டபெயரையும் ஏற்பது ஹீரோ

"ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது என்பது சரியே. ஒரு படத்தில் கடுமையான உழைப்பை அவர்கள் கொட்டி நடிக்கிறார்கள். ஒரு படம் ஃப்ளாப் ஆகும்போதும் அதற்கான கெட்டபெயரையும் அவர்கள் தானே ஏற்றுக்கொள்கிறார்கள்?

மற்ற ஹீரோயின்களுக்கு

மற்ற ஹீரோயின்களுக்கு

அந்த விஷயத்தில் நடிகைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையே" எனக் கூறியுள்ளார் அனுஷ்கா. கதையின் நாயகியாக நடிக்கும் அனுஷ்காவின் புரிதல், டூயட் பாடி நடிக்கும் பல ஹீரோயின்களுக்கு இல்லையே?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X