அப்டியே உல்டா...பாலிவுட்டில் ரீமேக்காகும் தமிழ் திரைப்படங்கள்!

சென்னை: இந்திய சினிமாவில் பாலிவுட் படங்களுக்கு என ஒரு தனி அந்தஸ்து இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக பாலிவுட்டில் ரீமேக் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற சில படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

ஷங்கர்

ஷங்கர்

2005 ல் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் அந்நியன். இதில் அம்பி, ரெமோ, அந்நியன் என ஒரே சமயத்தில் 3 விதமான கேரக்டர்களில் நடித்து அசத்தி இருப்பார் விக்ரம். சூப்பர்ஹிட் படமாக அமைந்த இந்த படத்தை இந்தியில் ஷங்கரே ரீமேக் செய்ய உள்ளார். இதில் விக்ரம் நடித்த கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்க போகிறார்.

அஜய் தேவ்கான்

அஜய் தேவ்கான்

2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் கைதி. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல லாபம் ஈட்டியது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவரவுள்ளது.

சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா

2019ம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் தடம். 2019ம் ஆண்டில் வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் டாப்பில் உள்ள படம் தடம். நல்ல லாபத்தையும் ஈட்டி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளிவரவுள்ளது.

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார்

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான ராட்சசன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X