டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் நேரடியாக ஸ்ட்ரீம் ஆகவுள்ள தமிழ் படங்கள்!
சென்னை: கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் உள்ளன.
சில முக்கியமான படங்கள் காத்திருந்து திரையரங்குகளில் வரவுள்ளன. சில திரைப்படங்கள் OTT ரிலீசுக்கு கைமாறி உள்ளது.
அந்த வகையில் முன்னனி OTT தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் வரவுள்ள தமிழ் படங்கள் குறித்த ஒரு தொகுப்பு.

அரசியல் பின்னணி
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி உள்ள படம் துக்ளக் தர்பார். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்ட இந்த படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் வெளிவரவுள்ளது.

போலீஸ் அதிகாரி
ஏ.சி. முகில் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பேதுராஜ், மறைந்த இயக்குனர் மகேந்திரன்,நடித்துள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் வெளிவரவுள்ளது.

ஹாரர் காமெடி
தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் தயராகியுள்ள திரைப்படம் இடியட்.
ஹாரர் காமெடி வகையிலான இந்தப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் வெளிவரவுள்ளது.

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள படம் டாக்டர். இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கிட்ட தட்ட இந்த படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் வெளிவருவது உறுதியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











