விஜய் படங்களை தயாரிக்க வரிசைகட்டும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.. தில் ராஜுவை தொடர்ந்து அல்லு அரவிந்த்!
சென்னை : மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு திரைப்படத் துறையில் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பீஸ்ட் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
விரைவில் தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கில் அறிமுகமாக இருக்கும் விஜய்யை வைத்து மற்றுமொரு தெலுங்கு படத்தையும் தயாரிக்க அல்லு அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மார்க்கெட் பல மடங்கு
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு உலக அளவில் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்துறையிலும் விஜய்க்கான மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இணைந்து நடிக்கும் காட்சிகள்
விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இப்பொழுது இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கு பீஸ்ட் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 2 கெத்தான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு கலக்கியது. பீஸ்ட்டில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்க பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Recommended Video

விஜய்யின் அறிமுகப் படத்தை
இந்த நிலையில் விஜய்யின் முதல் தெலுங்கு படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ள தில் ராஜு விஜய்யின் தெலுங்கு அறிமுகப் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை வம்சி பிடிபல்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ஆகியிருந்தன . இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம ஆக்ஷன் கதை
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருக்கும் அல்லு அரவிந்த் விஜய்யை வைத்து தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ஸ்டைலா மாஸாக செம ஆக்ஷன் கதை தயாராகியுள்ளது. விஜய்யுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது விரைவில் இதுபற்றிய நற்செய்தி வரும் என தெலுங்கு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது


Click it and Unblock the Notifications