இது காண்டம் விளம்பரம் மாதிரி இருக்கு.. யஷ் பிறந்தநாளுக்கு வெளியான ‘டாக்ஸிக்’ க்ளிம்ஸ்.. செம ட்ரோல்!
சென்னை: கடந்த 2003ம் ஆண்டு மெளலி இயக்கத்தில் மாதவன், கீது மோகன்தாஸ், கேமியோ ரோலில் கமல்ஹாசன் நடித்த நள தமயந்தி படத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடிப்பில் 'டாக்ஸிக்' படம் உருவாகி வருகிறது.
1986ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி பிறந்த நடிகர் யஷ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அதை முன்னிட்டு யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தின் க்ளிம்ஸ் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய டான் பாரில் பெண்களுடன் ஜாலியாக சரக்கடித்துவிட்டு ஜல்சா பண்ணுவது போன்ற காட்சியை படக்குழு வெளியிட்ட நிலையில், அதை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
கரீனா கபூர் முதல் நயன்தாரா வரை: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் கரீனா கபூர், ஹூமா குரேஷி, நயன்தாரா என ஏகப்பட்ட நடிகைகள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தளபதி விஜய்யின் 69வது படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது.
பிறந்தநாள் டீசர்: கேஜிஎஃப் படத்தின் மூலம் கன்னட திரையுலகத்துக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கை கொடுத்த யஷ் உடனடியாக கேஜிஎஃப் 2 மூலமாக 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பிலும் கன்னட திரையுலகை இணைத்துவிட்டார். ஆனால், அவருக்கு பிறகு மற்ற நடிகர்கள் எவ்வளவு போராடினாலும் 100 கோடி வசூல் வரவே மூச்சுத் திணறும் நிலைமை தான் உள்ளது. இந்நிலையில், அடுத்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டை படமாக டாக்ஸிக் வரப்போகிறது என்பதை உணர்த்தும் வகையில் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு அதன் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது.
காண்டம் விளம்பரம் மாதிரி இருக்கு: யஷ் டெரரான கேங்ஸ்டராக வந்து ஆயிரம் பேரை பெரியம்மாவை வைத்து சுடுவார் என்று பார்த்தால், ஜாலியாக பாரில் பெண்களுடன் சரக்கை ஊற்றிக் குளித்து கும்மாளம் போடும் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இது காண்டம் விளம்பரம் போல உள்ளதாக நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இப்பவே படத்துக்கு எதிரான டாக்ஸிக் கிளம்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











