மொசக்குட்டி படத்துக்கு யு சான்று!
ஜீவன் இயக்கத்தில் வீரா - மகிமா நடித்துள்ள மொசக்குட்டி படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
மைனா, சாட்டை போன்ற படங்களைத் தயாரித்த ஜான் மேக்ஸின் ஷாலோம் ஸ்டுடியோ தயாரித்துள்ள படம் மொசக்குட்டி.

இந்தப் படத்தை வரும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
படத்தை சமீபத்தில் தணிக்கைக் குழுவினருக்குப் போட்டுக் காட்டினர். படத்தில் இரு காட்சிகளை மட்டும் வெட்டச் சொன்ன அதிகாரிகள், அனைவரும் பார்க்கக் கூடிய படம் எனும் வகையில் யு சான்று வழங்கினர்.
இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். ஆன்டனி எடிட்டிங் செய்ய, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் எம் ஜீவன்.
Comments


Click it and Unblock the Notifications