எதிர்பார்ப்பை கிளப்பிய நட்சத்திர திருமணங்கள்...திருமணத்தின் போது நடிகைகளின் வயது என்ன தெரியுமா?

சென்னை : அனைவராலும் பெரிதும், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

உடன் பணியாற்றி நடிகரை, டைரக்டரை காதலித்து திருமணம் செய்து கொள்வது திரையுலகில் ஒன்றும் புதிதில்லை என்றாலும் சிலரின் திருமணங்கள் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களிடமும், திரையுலகிலும் ஏற்படுத்தி உள்ளன. அதிலும் நடிகைகள் பலரின் திருமணங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதற்கு முன் இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகைகளின் திருமணங்களையும், திருமணம் நடைபெறும் போது அவர்களின் வயது என்ன என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

சூர்யா – ஜோதிகா

சூர்யா – ஜோதிகா

2003 ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் நடித்த போது சூர்யா - ஜோதிகா இடையே காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள் 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெறும் போது ஜோதிகாவிற்கு வயது 29.

நஸ்ரியா – ஃபகத் ஃபாசில்

நஸ்ரியா – ஃபகத் ஃபாசில்

மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஃபகத் ஃபாசிலுடன், Bangalore days என்ற படத்தில் ஒன்றாக நடித்தார் நஸ்ரியா. இந்த படத்தில் இருவரும் கணவன் - மனைவியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதற்கு பிறகு பல படங்களில் ஒன்றாக நடித்தனர். பிறகு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தின் போது நஸ்ரியாவிற்கு வயது 19.

 சமந்தா – நாக சைதன்யா

சமந்தா – நாக சைதன்யா

கெளதம் மேனன் இயக்கிய ஓ மாய சீசாவே படத்தில் நடித்த போது சமந்தா - நாகசைதன்யா இடையே காதல் ஏற்பட்டது. பிறகு சில படங்களில் ஒன்றாக நடித்தவர்கள், வீட்டில் பேசி திருமணம் செய்து கொண்டனர். கோவாவில் மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. அப்போது சமந்தாவிற்கு வயது 30.

சாயிஷா – ஆர்யா

சாயிஷா – ஆர்யா

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தனர். பிறகு காப்பான், டெடி போன்ற படங்களில் ஒன்றாக நடித்தனர். சில ஆண்டுகள் காதலித்த இவர்கள், பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தின் போது சாயிஷாவின் வயது 21.

காஜல் அகர்வால் – கெளதம் கிச்சலு

காஜல் அகர்வால் – கெளதம் கிச்சலு

நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபரான கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காஜல் அகர்வாலின் திருமணம் பாரம்பரிய முறைப்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தின் போது காஜலின் வயது 35.

 நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றிய போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது. 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இன்று திருமணம் செய்து கொண்டனர். நயன்தாராவிற்கு தற்போது 37 வயதாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X