பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஆரியும் தானும் மனம் விட்டு பேசியதாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வந்த பிரபலம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்டுகளாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

அவர்களில் ஒருவர்தான் வின்னர் ஆக போகிறார். இதற்கான அறிவிப்பு நாளை நடைபெறும் கிராண்ட் ஃபினாலேவில் அறிவிக்கப்படவுள்ளது.

தெளிவாக தெரிந்துவிட்டது

தெளிவாக தெரிந்துவிட்டது

இந்நிலையில் இந்த வாரம் பழைய ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றனர். வந்து சென்ற அனைவருக்குமே ஆரியின் குணமும் அவருடைய ஆட்டமும் மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள வரவேற்பும் தெளிவாக தெரிந்துவிட்டது.

நல்ல நட்பு..

நல்ல நட்பு..

இதனால் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்களில் சிலரை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுமே ஆரியுடன் சுமூகமான போக்கை கடைப்பிடித்தனர். அனிதா, சனம் ஷெட்டி, சுச்சி ஆகியோர் ஆரியுடன் முன்பை காட்டிலும் நல்ல நட்பை பாராட்டினர்.

கடைசி ஆளாக..

கடைசி ஆளாக..

எவிக்ட்டான அனைத்து போட்டியாளர்களுமே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லாமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருந்தது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று சுரேஷ் சக்கரவர்த்தியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்.

ஆரியை கட்டியணைத்து..

ஆரியை கட்டியணைத்து..

வழக்கம் போல் கிடைத்த சொற்ப நேரத்திலும் பட்டையை கிளப்பினார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆரிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் ஆரியை கட்டியணைத்து அன்பபை வெளிப்படுத்தினார்.

ஆரியுடன் பேசினேன்..

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது குறித்து ஷேர் செய்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதாவது, நேரம் மற்றும் இடம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு கணத்தையும் ரசித்தேன். எனக்கும் ஆரி ப்ரோவுக்கும் இடையிலான மிகவும் மனம் நிறைந்த உரையாடல் இருந்தது. ஆனால் உங்களின் பல கோரிக்கைகளை நேரில் நிறைவேற்றியிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அன் கண்டிஷனல் லவ்

மேலும் மற்றொரு பதிவில் உங்களின் அனைத்து ஆதரவு மற்றும் அன்கண்டிஷனல் காதலுக்கு நன்றி.. ஆனால் உங்களுக்காக அந்த 5 மணிநேரமும் எனக்கு கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X