எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க.. புலம்பும் பிக்பாஸ் சரவணன்!
சென்னை : பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், மாமியார் வீடு,தாய் மனசு, சந்தோசம் என பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன்
நீண்ட இடைவேளைக்கு பிறகு நந்தா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த. சரவணனுக்கு பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது
இப்பொழுது படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் சரவணன் தன்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

விஜயகாந்த் சாயலிலேயே
நடிகர் சரவணன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது பார்ப்பதற்கு விஜயகாந்த் சாயலிலேயே இருப்பதால் இவருக்கு ஆட்டோமேட்டிக்காக ரசிகர்கள் கூட்டம் உருவாகின. முதல் படம் வைதேகி வந்தாச்சு தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரவணன் ஹீரோவாக நடித்த பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. நடித்த சில படங்களிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சரவணன் திடீரென இடையில் படங்களை தயாரிப்பது மற்றும் இயக்குவது என நடிப்புடன் சேர்த்து மற்ற வேலைகளையும் செய்து வந்தார்

மிகப்பெரிய நஷ்டம்
இந்த நிலையில் படங்களை தயாரித்து அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதனால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். திரைப்படங்களில் நடிக்காமல் வெளிநாடுகளில் சென்று ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளை நடத்தி இருந்த கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு மீண்டும் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இயக்குனர் பாலா இவரை நந்தா படத்தில் நடிக்க வைத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு
நந்தா திரைப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம். சூர்யாவுக்கு மட்டுமல்லாமல் பாலா, ராஜ்கிரண் என அனைவருக்கும் மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது ஆனால் சரவணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தாலும் அவருக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை

பருத்திவீரனில் சித்தப்பு
இந்நிலையில் அமீர் இயக்கத்தில் பருத்திவீரனில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பிய சரவணனை ரசிகர்கள் மீண்டும் கொண்டாட ஆரம்பித்தனர். ஹீரோவாக நடித்த கார்த்திக்கு இணையாக சரவணனின் கதாபாத்திரம் பருத்திவீரனில் மிக முக்கியமான ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும். பருத்திவீரன் வெற்றிக்குப் பிறகு சில படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்

என்னை ஏமாத்திட்டாங்க
மீண்டும் ஒரு சுற்று வருவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் நல்ல படங்கள் எதுவும் அமையாததால் சிறு சிறு வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். கடைசியாக ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்தார். இப்பொழுது ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார். தான் தயாரித்த படங்கள் சரியாக ஓடியும் தனக்கு வர வேண்டிய பணத்தை கொடுக்காமல் எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க அதனால் நான் கடனாளியாக ஆனேன் என சரவணன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











