ஒரு படம் பண்ணிட்டு ஓவரா ஆடுறாங்க.. இளம் இயக்குனர்களை வெளுத்து விட்ட சுந்தர் சி!
சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து விட்டு இப்பொழுது நடிகராகவும் வலம் வந்து கொண்டுள்ளார்
அரண்மனை மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை இயக்கினார்
இப்பொழுது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சுந்தர் சி பட விழா ஒன்றில் பேசுகையில் ஒரு படம் பண்ணிட்டு ஓவரா பேசுறாங்க என இளம் இயக்குனர்களை வெளுத்து விட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

கார்த்திக் சுந்தர் சி கூட்டணியில்
தன்னுடைய படங்களை பார்க்க வரும் ஆடியன்ஸை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இருக்கும் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஜனரஞ்சகமான திரைப்படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. அஜித், கமல்ஹாசன், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ள சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் இணையும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஃபேவரைட் தான். அந்த வகையில் உள்ளத்தை அள்ளித்தா மேட்டுக்குடி உனக்காக எல்லாம் உனக்காக கண்ணன் வருவான் என கார்த்திக் சுந்தர் சி கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது

அரண்மனை 3
இயக்குனராக பல சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்துள்ள சுந்தர் சி தலைநகரம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் சுந்தர் சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அரண்மனை 1 மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தை இயக்கிய சுந்தர் சி இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது இந்த நிலையில் அரண்மனை 3 படத்தை மிக பிரமாண்டமாக இயக்கினார். இந்த படத்தில் ஆர்யா, ராசிகன்னா, சாக்ஷி அகர்வால் என பலர் நடித்திருக்க அரண்மனை 3 வெளியாகி வசூல் ரீதியாக முந்தைய பாகங்களை விட பின் தங்கியே இருந்தது

இளம் இயக்குனர்கள்
கலகலப்பு 1 மற்றும் 2 இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் ஜீவா,ஜெய்,ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் சுந்தர் சி தலைநகரம் 2 , பட்டாம்பூச்சி,வல்லான் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் புது புது கதைகள் உடன் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றார்கள். அதில் பலர் வெற்றி பெற்றுள்ளனர்
Recommended Video

ஒரு படம் பண்ணிட்டு ஓவரா பேசுறாங்க
இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய சுந்தர் சி ஒரு படம் பண்ணிட்டு சினிமான்னா என்னான்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க , பாலச்சந்தர், பாரதிராஜா எல்லாம் வெரைட்டி மூவிஸ் கொடுத்திருக்காங்க அவங்களே பேசாம இருக்காங்க அவங்க பண்ணதுல நமது துளி கூட பண்ணல, அவ்வளவு பண்ணிட்டு அவங்களே அடக்கமாய் இருக்கும்போது நீ எல்லாம் ஏன்டா ஆடுறன்னு கேட்கத் தோனுது. இவ்வாறு பட விழாவில் இளம் இயக்குனர்கள் சுந்தர் சி வெளுத்து விட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











