twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பஸ் கூட உங்க ஊர்ல நிக்காதுன்னு எல்லாரும் கிண்டல் பண்ணாங்க... மாரி செல்வராஜ் பட்ட அவமானங்கள்!

    |

    சென்னை : பரியேறும் பெருமாள், கர்ணன் என இயக்கிய இரண்டே படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்

    இப்பொழுது துருவ் விக்ரம்,உதயநிதி ஸ்டாலின் என அடுத்தடுத்து இரண்டு ஹீரோக்களை இயக்கி வருகிறார்.

    பீஸ்ட்டை தொடர்ந்து விக்ரம் படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்..6 மணிக்கு வந்த அப்டேட் இதுதான்பீஸ்ட்டை தொடர்ந்து விக்ரம் படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்..6 மணிக்கு வந்த அப்டேட் இதுதான்

    கர்ணன் படத்தில் காட்டியது போலவே நிஜ வாழ்க்கையிலும் தன்னுடைய ஊரிலேயே பஸ் நிற்காமல் போனதால் எல்லாரும் கிண்டல் பண்ணாங்க என தான் பட்ட அவமானங்கள் குறித்து விவரித்துள்ளார் மாரி செல்வராஜ்.

    பரியேறும் பெருமாள்

    பரியேறும் பெருமாள்

    சாதியப் பாகுபாடுகளையும் சமூகத்தில் சமத்துவம் உண்டாக வேண்டும் எனவும் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஆணித்தரமாக கூறிவருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்குனர் ராம் இடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

    சொல்லத் துணியாத சாதிய பாகுபாடுகளை

    சொல்லத் துணியாத சாதிய பாகுபாடுகளை

    ராம் இயக்கத்தில் வெளியான சில படங்களில் ஒரு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாரி செல்வராஜுக்கு முதல் படம் பரியேறும் பெருமாள் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத யாரும் சொல்லத் துணியாத சாதிய பாகுபாடுகளையும் சமூகத்தில் ஏற்படவேண்டிய சமநிலையை குறித்தும் மிக அழகாக கூறியிருந்தது மாரி செல்வராஜ் பக்கம் ரசிகர்களை திருப்பியது.

    நிஜவாழ்க்கையிலும் நடந்ததாக

    நிஜவாழ்க்கையிலும் நடந்ததாக

    பரியேறும் பெருமாள் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வெளியான கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தது. சமீபத்தில் ஓராண்டு நிறைவு செய்த கர்ணன் படத்தில் நடந்தேறியது போலவே கொடூரம் தனக்கு நிஜவாழ்க்கையிலும் நடந்ததாக மாரி செல்வராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    எல்லாரும் கிண்டல் பண்ணாங்க

    எல்லாரும் கிண்டல் பண்ணாங்க

    கர்ணன் படத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் பஸ் நிற்காமல் சென்றதால் அந்த ஊர் மக்கள் அவதிப்படுகின்றனர். இத்தகைய சூழலில் ஒருநாள் அரசு அதிகாரிகளுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினையால் உயிர் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு அந்த கிராமமே அளிக்கப்படுகிறது. இவ்வாறு கர்ணன் படத்தில் காட்டப் பட்டது போலவே மாரி செல்வராஜ் கல்லூரி படிக்கும் பொழுது பேருந்து நிறுத்தத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருப்பாராம். ஆனால் அந்த பேருந்து ஒவ்வொருமுறையும் நிற்காமல் போனதால் பஸ் கூட உங்க ஊர்ல நிக்காதுன்னு எல்லாரும் கிண்டல் செய்ததாகவும் அந்த பாதிப்பை அனுபவித்ததால் கர்ணன் படத்தை இயக்கியதாகவும் மாரி செல்வராஜ் விவரித்து கூறியுள்ளார்.

    English summary
    Most of them Teased me that Even buses didn’t stop in my home town says Mari selvaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X