பிக்பாஸ் சீசன் 5... அதிகம் பாப்புலரான டாப் 5 போட்டியாளர்கள் இவங்க தான்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த முறை 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்களில் திருநங்கையான நமீதா மாரிமுத்து, உடல்நலக் குறைவால் முதல் வாரத்திலேயே, மருத்துவ காரணங்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பாப்புலர் போட்டியாளர்கள்
நமீதா வெளியேறிய பிறகு எலிமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டு, முதல் ஆளாக நாடியா சாங் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் 16 பேர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பாப்புலரான போட்டியாளர்கள் யார் என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

முதலிடம் பிடித்தவர்
Ormax media நிறுவனம் அக்டோபர் 9 ம் தேதி முதல் அக்டோபர் 15 வரை ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த 7 நாட்களில் பிக்பாஸ் ரசிகர்களிடம் அதிகம் பாப்புலரான டாப் 5 போட்டியாளர்கள் யார் என மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவர்களின் மனம் கவர்ந்து, முதல் இடத்தில் இருக்கும் போட்டியாளர் பிரியங்கா தேஷ்பாண்டே தான்.

இவங்களும் இருக்காங்க
இவரைத் தொடர்ந்து அதிகம் பாப்புலரான போட்டியாளர்கள் பட்டியலில் இமான் அண்ணாச்சி இரண்டாவது இடத்திலும், ராஜு ஜெயமோகன் மூன்றாவது இடத்திலும், பாவனி ரெட்டி நான்காவது இடத்திலும், இசைவாணி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ஹவுஸ்மேட்களின் ஃபேவரைட்
இந்த ஆய்வு மட்டுமல்ல இதனை ஹவுஸ்மேட்களும் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர். முதல் நாளில் இருந்தே ஃபன் பண்ணி, வீட்டில் உள்ளவர்களையும், ரசிகர்களையும் என்டடர்டைன் பண்ணி, அனைவரையும் சிரிக்க வைத்தவர்கள் பெயர்களாக பிரியங்கா, இமான் அண்ணாச்சி மற்றும் ராஜுவின் பெயரையே சொல்லப்பட்டு வருகின்றன.

ரசிகர்கள் ஆதரவு
விஜயதசமியன்று நடத்தப்பட்ட ஜொலித்தவர்கள் யார் என்ற டாஸ்க்கில் கூட இவர்கள் மூன்று பேரின் பெயர்களை தான் அதிகமான போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வெளியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புக்களும் இதையே உறுதிப்படுத்தி உள்ளது. பிரியங்கா மற்றும் ராஜு தான் தங்களின் ஃபேவரைட் என அதிகமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











