விக்கிபீடியா தேடல்...டாப் லிஸ்டில் தென்னிந்திய ஸ்டார்கள்...இவர் தான் முதலிடம்

சென்னை : இளைஞர்கள் தங்களின் ஃபேவரைட் நடிகர் - நடிகைகள் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள தேடும் இணையதளங்களில் ஒன்று விக்கிலீடியா. இதில் குறிப்பிட்ட நபர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும்.

அப்படி சமீப காலமாக விக்கிபீடியாவில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதில் தென்னிந்திய பிரபலங்கள் தான் டாப் இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். டாப் 10 இடங்களை தென்னிந்திய ஹீரோக்கள் தான் பிடித்துள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட விஜய்

அதிகம் தேடப்பட்ட விஜய்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை நம்ம விஜய் தான். விஜய்க்கு தமிழில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதுடன், இவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழ் பெண்களை கவர்ந்த அல்லு அர்ஜுன்

தமிழ் பெண்களை கவர்ந்த அல்லு அர்ஜுன்

விஜய்யை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பது தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். டோலிவுட்டில் மட்டுமல்ல தமிழ் பெண் பலரின் ஃபேவரைட் ஹீரோ இவர் தானாம். இவரது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடனத்திற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தமிழில் நடிக்காமலே இப்படி

தமிழில் நடிக்காமலே இப்படி

மூன்றாவது இடத்தில் இருப்பது மகேஷ் பாபு. அவர் நேரடியாக தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும் தென்னிந்தியா முழுவதும் பல ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளர் மற்றும் சமூக சேகவரும் கூட.

அதிகம் பேசப்பட்ட கர்ணன்

அதிகம் பேசப்பட்ட கர்ணன்

சமீபத்தில் வெளியான கர்ணன் படம் பலராலும் பேசப்பட்டதால் இந்த பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளார் தனுஷ். The Extraordinary journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்த தனுஷ், தற்போது The Gray Man படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பாகுபலியால் உலக புகழ்

பாகுபலியால் உலக புகழ்

பாகுபலி ஹீரோ பிரபாஸ் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இவர் தோற்றம், நடிப்பு திறமை ஆகியவற்றால் பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருகிறார். பாகுபலி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு உலக புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலில் பிரபாஸும் இணைந்து விட்டார்.

இந்திய சூப்பர்ஸ்டார்

இந்திய சூப்பர்ஸ்டார்

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினி இந்த பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளார். கடைசியாக தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினியின் அடுத்த படமான அண்ணாத்த படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Recommended Video

Ronaldo Vs Thalapathy ரெண்டு பேருக்கும் பெரிய ஒற்றுமை | COCO COLA
இந்திய சினிமாவிற்கு உலக தரம்

இந்திய சினிமாவிற்கு உலக தரம்

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் 7 வது இடத்தில் இருப்பவர் சூர்யா. சமீபத்தில் நடித்த சூரரை போற்றி படத்தால் இந்திய சினிமாவை உலக ஃபேமஸ் ஆக்கியவர். அவரது அர்ப்பணிப்பான நடிப்பு அனைவரும் அறிந்ததே. இவரது அடுத்த படமான நவரசா, ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்ராவில் 10 வேடங்கள்

கோப்ராவில் 10 வேடங்கள்

சியான் விக்ரம் இந்த பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் இவரது படங்கள் ஏதும் ரிலீசாகவில்லை. கோப்ரா, சியான் 60 என வரிசையாக இவரது படங்கள் தயாராகி வருகின்றன. கோப்ரா படத்தில் இவர் 10 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் ரசிகர்கள்

இந்தியா முழுவதும் ரசிகர்கள்

கேஜிஎஃப் படத்தின் ஹீரோ யாஷ், இந்த பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார். இவருக்கு இந்தியா முழுவதும் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது பிளாக்பஸ்டர் படமான கேஜிஎஃப் படத்தில் இரண்டாம் பாகம் எப்போதும் ரிலீசாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X