Priya Bhavani Shankar Net worth :சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு!

சென்னை : வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பெரும்பாலான நடிகர்கள் நடிகைகள் வெள்ளித்திரையில் பிரகாசமாக ஜொலித்துவிட்டு, பட வாய்ப்பு இல்லாமல் போன பின்தான் சின்னத்திரைக்கு வருவார்கள்.

Most successful actress Priya Bhavani Shankar Net worth

ஆனால் ஒரு சில நடிகைகள் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று அங்கேயும் வெற்றி பெறுவார்கள். அந்த வரிசையில் முதல் இடம் பிடித்தவர் தான் பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர் : புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த சீரியல் மூலம் கிடைத்த நல்ல பெயரை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி சங்கர், மேயாத மான் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Most successful actress Priya Bhavani Shankar Net worth

அடுத்தடுத்த படங்களில் : முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்த பிரியா, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, திருச்சிற்றம்பலம், யானை உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் அகிலன் படத்திலும், சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

சொத்து மதிப்பு : பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் பிரியா பவானி சங்கரின் சொத்துக்குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரியாவுக்கு இதுவரை சொந்த வீடு இல்லாத நிலையில் அண்மையில் தான் சொந்த வீட்டில் குடியேறினார். மேலும் இவர், BMW X1 மற்றும் காண்டோ கார் வைத்து இருக்கிறார். ஒரு படத்திற்கு சுமார் 20 லட்சம் ரூபாயை சம்பளமாக பெரும் பிரியா பவானி சங்கரின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 6 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கைவசம் உள்ள படங்கள் : எளிமையான நம் பக்கத்துவீட்டு பெண் போல இருக்கும் பிரியா பவானி சங்கர், அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமான போதும், சம்பளத்தை உயர்த்தாததால் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ் ஆக இவர் இருக்கிறார். தற்போது இவரின் கை வசம் இந்தியன் 2,டிமாண்டி காலனி 2,பொம்மை போன்ற தமிழ் படங்களிலும் ஜீப்ரா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X