தனுஷ், விஜய் சேதுபதியை தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கும் பிரபல கோலிவுட் ஹீரோ: ஆனாலும் இது புதுசு!

மும்பை: தமிழில் 'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னா, தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோவாக மட்டும் இல்லாமல் குணச்சித்திரம், வில்லன் என மிரட்டி வருகிறார் பிரசன்னா.

இந்நிலையில், அவர் முதன்முறையாக கொஞ்சம் புதிய முயற்சியுடன் பாலிவுட்டில் களமிறங்குகிறார்.

லவ்லி ஸ்டார் பிரசன்னா

லவ்லி ஸ்டார் பிரசன்னா

'பைவ் ஸ்டார்' படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த பிரசன்னா, தொடர்ந்து அழகியே தீயே, கண்டநாள் முதல், சீனா தானா என கொஞ்சம் வெரைட்டியான கேரக்டரில் நடித்து வந்தார். பிரசன்னாவை ஸ்க்ரீனில் பார்த்தாலே கண் கொட்டாமல் ரசிக்கும் அளவிற்கு, அவரது நடிப்பும் உடல் மொழியும் லவ்லியாக இருக்கும்.

அஞ்சாதே கொடுத்த வில்லன் அடையாளம்

அஞ்சாதே கொடுத்த வில்லன் அடையாளம்

பிரசன்னாவை இவ்வளவு இயல்பாக பார்த்த ரசிகர்களுக்கு, 'அஞ்சாதே' படம் ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. மிஷ்கின் இயக்கத்தில் அஜ்மல், நரேன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்த 'அஞ்சாதே' படத்தில், கொடூரமான வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு பிரசன்னாவின் ஆக்டிக், வேற லெவலில் மாறியது.

சினிமாவில் இருந்து வெப் சீரிஸ்

சினிமாவில் இருந்து வெப் சீரிஸ்

பிரசன்னாவிடம் சரியான திறமைகள் இருந்தும், அவருக்கு தரமான படங்கள் அமையவில்லை என, ரசிகர்கள் கூறி வந்தனர். பானா காத்தாடி, பவர் பாண்டி, திருட்டுப் பயலே 2, துப்பறிவாளன் என அவ்வப்போது சில சூப்பர் ஹிட் படங்களிலும் பிரசன்னா நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் சினிமாவில் இருந்து வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்திவருகிறார் பிரசன்னா.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

சமீபத்தில் கூட பிரசன்னாவின் 'FingerTip' வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள 'விக்டிம்' என்ற ஆந்தாலஜி படம், சோனி ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷ், விஜய் சேதுபதியை தொடர்ந்து பிரசன்னாவும் பாலிவுட்டில் நடிக்கவுள்ளார். ஆனால், இது திரைப்படம் அல்ல வெப் சீரிஸ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது, இதில், லாரா தத்தா, ஆஷிஸ் வித்தியார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

விரைவில் அபிசியல் அப்டேட்

விரைவில் அபிசியல் அப்டேட்

பாலிவுட்டில் பிரசன்னா நடிக்கும் இந்த வெப் சீரிஸ்ஸின் டைட்டில் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரசன்னாவிற்கு இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் பிரசன்னாவிற்கு, ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X