அது தான் சார் தளபதி.. இந்தியளவில் அதிக லைக்குகளை அள்ளிய மாஸ்டர் டீசர் #MostLikedMasterTeaser

சென்னை: தீபாவளி சரவெடியாய் வெளியான மாஸ்டர் டீசர் இந்தியளவில் அதிக லைக்குகளை அள்ளிய டீசர் என்கிற அபார சாதனையை படைத்துள்ளது.

Recommended Video

Master Teaser Record Breaking • Trending in 9 Countries | Thalapathy Vijay

ரெக்கார்டுகளை உருவாக்குவதிலும், அதனை உடைத்து புதிய சாதனையை படைப்பதிலும் தளபதிக்கு நிகர் தளபதி தான்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் பட்டாசாய் இருக்கின்றன.

மாஸ்டர் டீசர்

மாஸ்டர் டீசர்

மரண மாஸ் டீசர் என்கிற வார்த்தைக்கு அர்த்தமாக மாஸ்டர் டீசர் வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் விஜய் ஒரு மாஸ் வசனம் கூட பேசவில்லை. ஒற்றைக் கண்ணால் அவர் பார்க்கும் அந்த ஒரு ஷாட் போதும் தனது ரசிகர்களை புல்லரிக்க வைக்க என நன்றாகவே அறிந்து வைத்துள்ளார். லோகேஷ் கனகராஜின் திறமை ஒவ்வொரு ஃபிரேமிலும் தெறிக்கிறது.

20 மில்லியன் வியூஸ்

16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள், 1.6 மில்லியன் லைக்குகளை அள்ளிய முதல் இந்திய டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் திரைப்படம் படைத்துள்ளது. தற்போது 24 மணி நேரத்திற்கும் குறைவாக 20 மில்லியன் பார்வைகளையும் 1.8 மில்லியன் லைக்குகளையும் கடந்து இன்னொரு இமாலய சாதனையை படைத்துள்ளது.

மரண மாஸ்

மரண மாஸ்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இடம்பெறும் காட்சிகள் எல்லாமே டீசரில் மரண மாஸாக இருக்கின்றன. சாந்தனு, கெளரி கிஷன், மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் என டீசரில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டு ஒவ்வொரு ஃபிரேமையும் எடிட்டர் அழகாக செதுக்கி உள்ளார்.

இந்தியளவில் டிரெண்டிங்

மாஸ்டர் படத்தின் அட்டகாசமான டீசரை பாராட்டாத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் முதல் ஏகப்பட்ட பிரபலங்கள் டீசரை பாராட்டி வருகின்றனர். #MostLikedMasterTeaser என்ற ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எம்மதமும் சம்மதம்

மாஸ்டர் பட டீசரில் தளபதி விஜய், கல்லூரி அறையில் படுத்துக் கொண்டிருக்கும் ஒரு காட்சியில், சுவற்றில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மத குறியீடுகள் உள்ளன என்றும், நடிகர் விஜய்க்கு எல்லா மதங்களும் ஒன்று தான் என்றும், இதை கவனிசீங்களா என ஏகப்பட்ட குறியீடுகளையும் டீசரில் ரசிகர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

டாப் 3ல் தளபதி தான்

இந்தியளவில் அதிக லைக்குகளை அள்ளி மாபெரும் சாதனைகளை படைத்த டீசர்கள் பட்டியலில் இருக்கும் டாப் 5 படங்களில் டாப் 3ல் தளபதி விஜய்யின் படங்கள் தான் இருக்கின்றன. மாஸ்டர் - 1.6 மில்லியன், சர்கார் - 1.48 மில்லியன், மெர்சல் - 1.2 மில்லியன், சாஹோ - 1.1 மில்லியன், வார் - 1 மில்லியன் என ரசிகர்கள் லிஸ்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X