Mothers Day Special : ஒவ்வொரு அம்மாவையும் கொண்டாடனும்.. அன்னையர் தின ஸ்பெஷல் படங்கள்!

கடவுள் நேரில் வரமுடியாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு வீட்டிலும் தாயை படைத்துள்ளார். இந்த உலகில் எத்தனையோ உறவுகள் கிடைத்தாலும் தாய் என்ற உறவுக்கு ஈடுஇணையே இல்லை.

பிள்ளையின் பசி அறிந்து உணவு கொடுக்கும் அன்புள்ளம் கொண்டவள், தாயன்றி வேறு யாராகவும் இருக்க முடியாது.

Mothers Day kollywood special movie

அன்னையர் தினம் : ஓய்வே இல்லாமல் உழைக்கும் தாயின் பாதம் சரணடைந்து, அவளுக்கு நன்றி செலுத்தவும், அவள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் நெகிழ்ந்து பாராட்ட ஆண்டு தோறும் மே 14ந் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி உன்னதமான தாயை புகழ்ந்து பல படங்கள் வந்திருந்தாலும் சில படங்கள் மனதை விட்டு மறையவே இல்லை .அப்படி மனதில் என்றும் இடம்பிடித்த படங்களை இப்போது பார்க்கலாம்.

பிச்சைக்காரன் : அம்மா சென்டிமெண்டிற்காக எத்தனை படங்கள் வந்தாலும், விஜய்ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. கோமாவில் இருக்கும் தாய் உடல் நலம் பெற ஒரு மண்டலம், பணக்கார ராஜபோக வாழ்க்கையை துறந்து பிச்சைக்காரனாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் தனது வாழ்க்கையை வாழ்ந்தது எல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. பிச்சைக்காரன் படத்தின் மூலம் விஜய் ஆண்டனி பெண்களுக்கு பிடித்தமான நடிகராக மாறினார்.

Mothers Day kollywood special movie

வலிமை : அன்னையர் தினம் வரிசையில் அஜித்தின் வலிமை படம் இணைந்துள்ளது. இந்த படத்தில் அஜித்தின் அம்மாவாக சுமித்ரா நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் உயர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும், அம்மா, அம்மா என உருகி இருப்பார். இந்த படத்தில் வரும் நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ என்ற பாடல் அன்னையர் தினமான இன்று பலரின் ஸ்டேடசில் இடம்பிடித்துள்ளது.

எம்.குமரன் : நடிகை நதியா, ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் S/o மகாலட்சுமி படத்தில் நதியா அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் நதியா நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவுக்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் தனது மகனுக்காக தாய் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X