அய்யோ பேபி, தப்புத் தப்பா செய்றியே: ஸ்ருதி ஹாஸனை திருத்திய நெட்டிசன்ஸ்
சென்னை: ஸ்ருதி ஹாஸன் அன்னையர் தின வாழ்த்து கூறியது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏம்பா, ஸ்ருதி ஹாஸன் அவுங்க அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்து கூறியது எல்லாம் ஒரு செய்தியா என்றால் ஆம் என்பது தான் பதில். நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் ஸ்ருதியோ இன்று தான் வாழ்த்தியுள்ளார்.
ஒரு வேளை மறந்திருப்பார் போல. மறந்தால் என்ன அது தான் வாழ்த்தி விட்டார் அல்லவா.
ஸ்ருதி
தான் கைக்குழந்தையாக அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். தனது அம்மா மிகவும் அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
ஸ்வீட்
ஸ்ருதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் சோ ஸ்வீட், க்யூட், அழகு என்று புகழ்ந்துள்ளனர்.
அன்னையர் தினம்
அன்னையர் தினம் நேற்று தானே ஸ்ருதி நீங்க இன்று வாழ்த்தியுள்ளீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அன்பு
அன்னையர் தினம் நேற்று தான் பரவாயில்லை வாழ்த்து தெரிவிப்பதில் தவறு இல்லை ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











