twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறைவா நீ ஆணையிடு… தாயே எந்தன் மகளாய் மாற... அன்னையரைக் கொண்டாடும் திரைப்பாடல்கள் !

    |

    சென்னை : அம்மா.... இந்த வார்த்தை ஓர் உன்னதமான அன்பின் வெளிப்பாடு... அன்பு, கருணை, இனிமை, தியாகம் அத்தனையும் ஓரே சொல்லில் அடக்கிவிட முடியும் என்றால் அது அம்மா. உச்சிகுளிர்ந்து வாரி அணைக்கும் போதும், கோபத்தில் கண் சிவக்கும் போதும் அன்பை ஆரப்பொழிய அம்மாவால் தான் முடியும்.

    கங்கனாவை துரத்தும் சர்ச்சைகள்... சட்ட சிக்கலிலும் சிக்கினார் சர்ச்சை நாயகி கங்கனாவை துரத்தும் சர்ச்சைகள்... சட்ட சிக்கலிலும் சிக்கினார் சர்ச்சை நாயகி

    அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது அனைவருடைய உள்ளங்களும் உணர்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது, மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடியவர் தான் தாய்.

    மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் நமக்கு ஜீவநாடியாக இருந்த அன்னையரை வாழ்த்துவதோடு, அவர்களை திரை பாடல்கள் மூலம் கொண்டாடிய சில பாடல்களைப் பற்றி பார்ப்போம்...

    கருவினில் என்னை சுமந்து

    கருவினில் என்னை சுமந்து

    அம்மா பாடல் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருதுவது கேஜிஎஃப் படத்தில் வரும் "கருவினில் என்னை சுமந்து" இந்த பாடலை மற்றப்பாடல்கள் போல அத்தனை எளிதில் கடந்து விட முடியாது. உயிருக்குள் எதையோ புகுத்தி மனதை பிசைந்து விடும். அதுவும் குறிப்பாக இந்த வரி, காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது... உனக்கு என் உயிரே ஆரத்தி... இந்த வரி கரையாத மனதையும் கரைத்துவிடும்.

    நூறு சாமிகள் இருந்தாலும்

    நூறு சாமிகள் இருந்தாலும்

    விஜய் ஆண்டனி நடிப்பில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த திரைப்படம் பிச்சைக்காரன். அம்மாவுக்காக பிச்சைக்காரனாக மாறும் ஹீரோ. இந்தப்படத்தில் வரும் பாடல் நூறு சாமிகள் இருந்தாலும்... அம்மா உன்னைப்போல் ஆகிடுமா என்ற பாடல் அனைவரையும் ஒரு கனம் சிந்திக்க வைத்தது என்று சொல்லலாம்.

    அம்மா அம்மா நீ எங்க அம்மா

    அம்மா அம்மா நீ எங்க அம்மா

    தனுஷ் நடித்த விஐபி படத்தில் வரும் "அம்மா அம்மா நீ எங்க அம்மா" இந்த பாடலை கேட்கும் போது செல்லமான கோபம் கூட இப்படி ஒரு இழப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை சிதைத்துவிடுமா என்று எண்ணம் தோன்றும்...தாயை இழந்தவர்களுக்கு மட்டுமே இதன் வலி புரியும்... ஐ மிஸ் யூ மா... என்று ஒத்தவரியில் வலியை உணர்த்திவிட முடியாது.

    சரண்யா

    சரண்யா

    ஜீவா, சரண்யா நடித்த திரைப்படம் ராம் இப்படத்தில் வரும் ஆராரிராரோ ... நான் இங்கு பாட தாயே நீ கண்ணுரங்கு... நம்மை தாலாட்டுப்பாடி தூங்க வைத்த தாய்க்கு தாலாட்டுப்பாடலாக வந்தது இந்த பாடல். கவிஞர் சினேகன் தன்னுடைய அம்மா இறந்த அன்று இந்த பாடலை எழுதினாராம். இந்த உலகில் அம்மாவை விட வேறெதுவும் முக்கியமில்லை என்பதை உணர்த்தியது இந்த பாடல் வரி.

    நல்வாழ்த்துக்கள்

    நல்வாழ்த்துக்கள்

    அன்னையர் தினத்தில் வெறும் வாழ்த்துக்களை கூறி இந்த நாளை கடந்து விட முடியாது. தாயின் சிறப்பைக்கூறவும், அவளின் பாசத்தில் திழைத்துப்போகவும் ஒரு நாள் போதாது... அன்பின் உச்சம் தொட்ட நான் உணர்ந்த முதல் தெய்வம்... இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற....அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

    English summary
    Mother’s day special song
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X