அம்மான்னா.. சும்மா இல்லடா.. அதுல்யா ரவி முதல் வரலக்‌ஷ்மி வரை ‘அம்மா’ குறித்து உருகும் பிரபலங்கள்!

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பல பிரபலங்கள் தங்கள் அம்மாவுடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Harrish Kalyan reduced his Salary | Varalakshmi Sarathkumar, Harathi Emotional

தங்கள் வாழ்வில் துணிச்சலையும், தைரியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்தவர் தாய் தான் என பல சினிமா பிரபலங்கள் உருக்கமான பதிவுகளையும் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

நடிகைகள் வரலக்‌ஷ்மி சரத்குமார், அதுல்யா ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், என பல பிரபலங்கள் தங்கள் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், அவர்கள் குறித்த பதிவுகளையும் இங்கே காண்போம்.

அதுல்யா ரவி

அதுல்யா ரவி

அன்பு என்றால் எனக்கு என்னன்னு தெரியும்.. அதை கற்றுக் கொடுத்தவர் என் அம்மா.. ஹேப்பி மதர்ஸ் டே.. எல்லா அம்மாக்களுக்கும் வாழ்த்துக்கள் என நாடோடிகள் 2 நடிகை அதுல்யா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

பாலிவுட்டின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா தனது அம்மா ஆஷிமா சர்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தினத்தன்று "லவ் யூ மா" பதிவிட்டுள்ளார். அனுஷ்கா சர்மாவை போல அவரது கணவர் விராத் கோலியும் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தன்னலமில்லா உள்ளம்

தன்னலமில்லா உள்ளம்

போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களை இயக்கி உள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அன்னையர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தினமும் நாம் காணும் கடவுள் என்றும் தன்னலமில்லா உள்ளம் கொண்ட உலகின் ஒரே ஜீவன் அம்மா என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன்

பிரேமம், கொடி என பல படங்களில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களை தனது சுருட்டை முடியால் சுண்டி இழுக்கும் அனுபமா பரமேஸ்வரன் இன்று தனது தாய் சுனிதா பரமேஸ்வரனை கட்டியணைத்தபடி போட்டோ போட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவரது ரசிகர்களும் சுனிதா பரமேஸ்வரனை வாழ்த்தி வருகின்றனர்.

எனக்கு தைரியம் தந்தவள்

எனக்கு தைரியம் தந்தவள்

எல்லோரும் என்னிடம் எப்பவுமே எப்படி இவ்வளவு தைரியமாக இருக்க என கேட்கின்றனர்? அவர்களுக்கு நான் தரும் பதில் இது தான். என் அம்மா, என்னுடைய சூப்பர் உமன், இன்ஸ்பிரேஷன் எல்லாம் அவர் தான். கருணையும் இருக்கும் தைரியமும் இருக்கும் ஒரே பெண்மணி அவர் தான் என வரலக்‌ஷ்மி சரத்குமார் வேற லெவலில் டிவீட் போட்டு இருக்கிறார்.

அமலா பால்

அமலா பால்

"வியக்கிறேன்.. உங்களைப் பற்றி அன்னையர் தினத்தில் நான் என்ன சொல்வதென்று" என நடிகை அமலா பால் தனது அம்மா மற்றும் சகோதரன் உடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். அமலா பால் தற்போதெல்லாம் போடும் பல போட்டோக்களுக்கு போட்டோகிராஃபர் அவர் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

அம்மாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

அன்னையர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X